FIFA World Cup 2026: 40 வயதில் ஸ்பெயினுக்கு எதிரான நங்கூரம்.. ஒரே நாளில் ஹீரோவான கேப் வெர்டே கோல் கீப்பர்!
Cape Verde Goal Keeper Vozinha: கேப் வெர்டேயின் கோல்கீப்பர் வோஜின்ஹா, ஸ்பெயினின் 27 கோல்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தடுத்தார். இந்த ஆட்டத்தைப் பார்க்கும்போது, வோஜின்ஹாவை கேப் வெர்டேயின் சுவர் என்று அழைப்பது தவறாக இருக்காது. ஆரம்பத்தில், கேப் வெர்டே மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையேயான போட்டி ஒருதலைப்பட்சமாகத் தோன்றியது.
2026 ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியில் (FIFA World Cup 2026) நேற்று அதாவது 2026 ஜூன் 15ம் தேதி கேப் வெர்டே மற்றும் ஸ்பெயின் (Cape Verde Vs Spain) அணிகள் மோதின. இப்போட்டி ஸ்பெயின் அணி வலுவானதாக தெரிந்தாலும் போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. 2026 ஃபிஃபா உலகக் கோப்பையில் முதல் முறையாகப் பங்கேற்கும் 4 அணிகளில் கேப் வெர்டேவும் ஒன்றாகும். அதன்படி, ஃபிஃபா உலகக் கோப்பையில் முதல் முறையாகப் பங்கேற்கும் 2வது மிகச்சிறிய நாடு இதுவாகும். ஃபிஃபா தரவரிசையில் கேப் வெர்டே 64-வது இடத்தில் உள்ளது. தரவரிசையில் 3ம் இடத்தில் உள்ள முன்னாள் உலக சாம்பியனான ஸ்பெயினை, கேப் வெர்டே ஒரு கோலுடன் கட்டுப்படுத்தியது.
அமெரிக்காவின் அட்லாண்டா மைதானத்தில் ஸ்பெயினுக்கு எதிராகத் தனது முதல் போட்டியில் ஆடிய கேப் வெர்டே, 0-0 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தைச் சமன் செய்தது. உலகக் கோப்பை வரலாற்றில் கேப் வெர்டே தனது முதல் புள்ளியைப் பெற்றது. 40 வயதான கோல்கீப்பர் வோசின்ஹா 7 கோல்களை தடுத்து தனது பங்களிப்பால் இந்தச் சாதனை மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
ALSO READ: ஃபிஃபா உலகக் கோப்பையில் நடக்கப்போகும் 3 விஷயங்கள்.. வரலாற்றில் இதுவே முதல் முறை!




யார் இந்த கோல்கீப்பர் வோஜின்ஹா..?
கேப் வெர்டேயின் கோல்கீப்பர் வோஜின்ஹா, ஸ்பெயினின் 27 கோல்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தடுத்தார். இந்த ஆட்டத்தைப் பார்க்கும்போது, வோஜின்ஹாவை கேப் வெர்டேயின் சுவர் என்று அழைப்பது தவறாக இருக்காது. ஆரம்பத்தில், கேப் வெர்டே மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையேயான போட்டி ஒருதலைப்பட்சமாகத் தோன்றியது. ஆனால் போட்டி முன்னேற முன்னேற, குறைத்து மதிப்பிடப்பட்ட அணியான கேப் வெர்டே பலவீனமானதல்ல, மாறாக வலிமையானது என்பது காட்சியளித்தது. போட்டியின் போது, ஸ்பெயின் அணி 27 முறை கேப் வெர்டேயின் கோல் கம்பத்தை குறிவைத்தது. இருப்பினும், ஸ்பெயினின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. இது கால்பந்து ரசிகர்களிடையே ரசிக்கும்படியாக அமைந்தது. ஸ்பெயின் மற்றும் கேப் வெர்டேயின் கோல் கம்பங்களுக்கு இடையில் ‘வோஜின்ஹா’ என்ற சுவர் நின்றதாலேயே இது சாத்தியமானது.
40 வயதான கேப் வெர்டே கோல்கீப்பர் வோஜின்ஹாவுக்கு எதிரான ஸ்பெயின் அணி மொத்தமாக 27 ஷாட்களை அடித்தது. அதில், வோஜின்ஹா 7 முறை பந்தை தடுத்தார். வோஜின்ஹா பெனால்டி பாக்ஸிற்குள் 6 முறையும், பாய்ந்து 3 முறையும் பந்தை தடுத்தார். இதன்மூலம், சிறிய அணியான கேப் வெர்டே அணிக்கு எதிரான பலம் மிக்க ஸ்பெயின் அணியால் ஒரு கோல் கூட அடிக்கப்படாமல் தடுத்தார். இந்த ஆட்டத்திறனுக்காக, வோஜின்ஹா ஆட்ட நாயகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஸ்பெயினுக்கு எதிரான தனது சிறப்பான ஆட்டத்தை வோஜின்ஹா தனது குடும்பத்தினருக்கு அர்ப்பணித்தார். இருப்பினும், தனது தாயாருக்கு விசா மறுக்கப்பட்டதால் அவரால் போட்டியில் கலந்துகொள்ள முடியவில்லை என்று கண்ணீர் விட்டு அழுதார்.
ALSO READ: அமெரிக்காவுக்கு வர நடுவருக்குத் தடை.. ஃபிஃபா உலகக் கோப்பையில் வெளியேற்றம்!
வோஜின்ஹாவின் குடும்ப பின்னணி:
வோஜின்ஹா சிறு வயதில் தனது தாத்தா பாட்டியுடன் வளர்ந்தார். ஆனால். அவர்களில் யாரும் போட்டியைப் பார்க்க மைதானத்தில் இருக்கவில்லை. இதன் காரணமாக, வோஜின்ஹாவின் தாத்தா பாட்டி சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்கள். 40 வயதில், வோஜின்ஹாவின் கடின உழைப்புக்கு பலன் கிடைத்தது. முன்னதாக, வோஜின்ஹாவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 50 ஆயிரம் பாலோவர்களை மட்டுமே கொண்டிருந்தார். இந்த போட்டிக்கு பிறகு 5 லட்சம் மேற்பட்ட ஃபாலோவர்களை பெற்றுள்ளார்.