FIH World Cup 2026: ஹாக்கி உலகக் கோப்பை.. இந்தியா – பாகிஸ்தான் மோதல் எப்போது..?
India - Pakistan FIH World Cup: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மொத்தம் 183 ஹாக்கி போட்டிகள் விளையாடப்பட்டுள்ளன. இதில் பாகிஸ்தான் 82 போட்டிகளிலும், இந்தியா 69 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மேலும் 32 போட்டிகள் சமநிலையில் முடிந்துள்ளன. ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் அணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
2026 ஹாக்கி உலகக் கோப்பையானது (FIH World Cup 2026) வருகின்ற 2026 ஆகஸ்ட் 15ம் தேதி முதல் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக, இந்திய அணியின் ஜெர்சி தொடர்பாக ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. இந்திய ஹாக்கி அணியின் (Indian Hockey Team) ஜெர்சியானது நீல நிறத்திலிருந்து காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த ஜெர்சி மாற்றம் தொடர்பாக முன்னாள் ஹாக்கி நட்சத்திர வீரர் தன்ராஜ் பிள்ளை உட்பட பல முக்கிய வீரர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இந்தநிலையில், இந்தியா – பாகிஸ்தான் போட்டி உட்பட, ஹாக்கி உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் முழு அட்டவணையை பற்றி தெரிந்து கொள்வோம்.
ALSO READ: கேப்டனாக ஹர்மன்பிரீத் சிங்.. உலகக் கோப்பைக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு!
2026 ஹாக்கி உலகக் கோப்பையை பெல்ஜியமும் நெதர்லாந்தும் இணைந்து நடத்துகின்றன. இது ஹாக்கி உலகக் கோப்பையின் 16வது பதிப்பாகும், இதில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. அனைத்துப் போட்டிகளும், போட்டியை நடத்தும் இரண்டு நகரங்களான (வாவ்ரே மற்றும் ஆம்ஸ்டெல்வீன்) இரண்டு மைதானங்களில் நடைபெறும். இந்த உலகக் கோப்பை ஆகஸ்ட் 14 முதல் ஆகஸ்ட் 30 வரை நடைபெறும்.




கிரிக்கெட்டைப் போலவே, ஹாக்கியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும்போது, ஒட்டுமொத்த உலகமும் அதைக் கவனித்துக் கொண்டிருக்கிறது. இரு அணிகளும் ஒரே பிரிவில் இருப்பதால், ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
முதல் கட்டத்தில், அனைத்து அணிகளும் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவும் பாகிஸ்தானும் ‘குழு D’-யில் உள்ளன. இதில் வேல்ஸ் மற்றும் இங்கிலாந்தும் அடங்கும். ‘குழு C’-யில் ஆஸ்திரேலியா, ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை அடங்கும். ‘குழு A’-யில் நெதர்லாந்து, அர்ஜென்டினா, நியூசிலாந்து மற்றும் ஜப்பான் ஆகியவை அடங்கும். ‘குழு B’-யில் பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் மலேசியா ஆகியவை அடங்கும்.
ஹாக்கி உலகக் கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி எப்போது நடைபெறும்?
இந்திய ஹாக்கி அணிக்கும் பாகிஸ்தான் ஹாக்கி அணிக்கும் இடையிலான போட்டி, வருகின்ற 2026 ஆகஸ்ட் 19ம் தேதி நெதர்லாந்தில் உள்ள வாக்னர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டி உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:00 மணிக்குத் தொடங்கும். இந்திய நேரப்படி, போட்டி சுமார் காலை 11:30 மணியளவில் தொடங்கும். முதல் கட்டத்தில் இந்தியா விளையாடும் கடைசிப் போட்டியாக இது இருக்கும்.
இந்திய அணியின் முதல் போட்டி எப்போது?
இந்தியாவின் முதல் போட்டி வருகின்ற 2026 ஆகஸ்ட் 15ம் தேதி வேல்ஸ் அணிக்கு எதிராக நடைபெறும். இந்தப் போட்டி உள்ளூர் நேரப்படி மதியம் 1:00 மணிக்கு, அதாவது இந்திய நேரப்படி ஏறக்குறைய காலை 9:30 மணிக்குத் தொடங்கும். இந்தியாவின் இரண்டாவது போட்டி இங்கிலாந்து அணிக்கு எதிராக 2026 ஆகஸ்ட் 17ம் தேதி உள்ளூர் நேரப்படி மதியம் 3:00 மணிக்குத் தொடங்கும். இந்தியா இந்த மூன்று போட்டிகளிலும் வாக்னர் மைதானத்தில் விளையாடும்.
ALSO READ: நீல நிறம் தவிர்ப்பு.. காவி நிற ஜெர்சிக்கு மாறிய இந்திய ஹாக்கி அணி.. எழுந்த விமர்சனம்!
இந்தியா – பாகிஸ்தான் இதுவரை நேருக்கு நேர்:
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மொத்தம் 183 ஹாக்கி போட்டிகள் விளையாடப்பட்டுள்ளன. இதில் பாகிஸ்தான் 82 போட்டிகளிலும், இந்தியா 69 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மேலும் 32 போட்டிகள் சமநிலையில் முடிந்துள்ளன. பாகிஸ்தான் 407 கோல்களையும், இந்தியா 390 கோல்களையும் அடித்துள்ளன. இருப்பினும், தற்போதைய நிலவரத்தைப் பார்க்கும்போது, இந்திய ஹாக்கி அணியே வலிமையானதாகத் தெரிகிறது. இந்த 2026ம் ஆண்டு, புரோ லீக் தொடரில் இந்தியா பாகிஸ்தானை 2 முறை தோற்கடித்தது. முதல் போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இந்தியா, இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை 7-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.