AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

FIFA World Cup 2026: ரசிகர்கள் அதிர்ச்சி! நிலநடுக்கத்தில் மிஸ்ஸான குடும்பம்.. சோகத்தில் கால்பந்து வீரர்!

Lucas Trejo Family: கால்பந்து வீரர் லூகாஸ் ட்ரெஜோவின் குடும்பம் வசிக்கும் லா குவைரா வீடு நிலநடுக்கத்தால் தாக்கப்பட்டு இடிந்து விழுந்தது. தனது குடும்ப உறுப்பினர்களுக்கு என்ன நேர்ந்திருக்கும் என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார். வீட்டின் நிலையைப் பார்க்கும்போது, ​​யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்பில்லை என்று தெரிகிறது.

FIFA World Cup 2026: ரசிகர்கள் அதிர்ச்சி! நிலநடுக்கத்தில் மிஸ்ஸான குடும்பம்.. சோகத்தில் கால்பந்து வீரர்!
லூகாஸ் ட்ரெஜோImage Source: Instagram
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 27 Jun 2026 22:11 PM IST

2026 ஃபிஃபா உலகக் கோப்பையில் (FIFA World Cup 2026) வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் அர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரரான லூகாஸ் ட்ரெஜோவை பீதிக்குள்ளாக்கியுள்ளது. இந்த பேரழிவுகரமான நிலநடுக்கத்தில் (Landslides) அவரது குடும்பம் முழுவதும் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2026 ஜூன் 24ம் தேதி வெனிசுலாவில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆகப் பதிவானது. அதைத் தொடர்ந்து 7.5 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நேரத்தில், அர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரரான லூகாஸ் ட்ரெஜோ, கோபா வெனிசுலா போட்டிக்காக கராகஸ் நகரில் தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது, ​​நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டன. மேலும், கட்டிடங்கள் இலைகளைப் போல சரிந்து விழுந்தன. இந்த சமயத்தில், லூகாஸின் குடும்பம் வசித்து வந்த பல மாடிக் கட்டிடம் ஒன்றும் இடிந்து விழுந்தது. அதில் அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளும் அடங்குவர். ஒருவேளை கட்டிடம் இடிந்து விழுந்திருந்தால், தனது குடும்பத்திற்கு என்ன நேர்ந்திருக்குமோ என்று லூகாஸ் ட்ரெஜோ தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

ALSO READ: விதிகளை மீறிய நேபாள கால்பந்து அணி.. இடைநீக்கம் செய்த ஃபிஃபா.. காரணம் என்ன?

லூகாஸ் குடும்பத்திற்கு என்ன ஆனது..?


கால்பந்து வீரர் லூகாஸ் ட்ரெஜோவின் குடும்பம் வசிக்கும் லா குவைரா வீடு நிலநடுக்கத்தால் தாக்கப்பட்டு இடிந்து விழுந்தது. தனது குடும்ப உறுப்பினர்களுக்கு என்ன நேர்ந்திருக்கும் என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார். வீட்டின் நிலையைப் பார்க்கும்போது, ​​யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்பில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து லூகாஸ் தனது குடும்பத்தைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லாத நிலையில், அவர் இன்ஸ்டாகிராமில் உணர்ச்சிப்பூர்வமான மற்றும் மனதை நொறுக்கும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதையடுத்து, உலகெங்கிலும் உள்ள ரசிகர்களிடமிருந்து அவருக்கு உணர்ச்சிப்பூர்வமான ஆதரவு கிடைத்துள்ளது. லா குவைரா வீட்டைச் சுற்றி யாராவது இருந்தால், அவரது மனைவி யனினா மரானில்லா, மகன் ஆரோன் மற்றும் மகள் ஐன்ஹோவா ஆகியோரின் பாதுகாப்பைப் பற்றித் தெரிவிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார். அவரது பதிவு அர்ஜென்டினா மற்றும் வெனிசுலாவில் வைரலாகியுள்ளது.

ALSO READ: நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்ற உலகின் மிகச்சிறிய நாடு.. வரலாறு படைத்த கேப் வெர்டே!

யார் இந்த லூகாஸ் ட்ரெஜோ?

38 வயதான லூகாஸ் ட்ரெஜோ, வெனிசுலாவின் செகுண்டா டிவிஷன் கிளப்பான மரிடிமோ அணிக்காக டிபெண்டர் வீரராக விளையாடுகிறார். மேலும், லூகாஸ் வெனிசுலாவின் மொனாகாஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பிற்காகவும் விளையாடுகிறார். லூகாஸ் ட்ரெஜோ இதற்கு முன்பு ஐரோப்பா, அமெரிக்கா, கொலம்பியா, பெரு மற்றும் மெக்சிகோவில் உள்ள கிளப்புகளுக்காக விளையாடியுள்ளார்.

Follow Us