FIFA World Cup 2026: நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்ற உலகின் மிகச்சிறிய நாடு.. வரலாறு படைத்த கேப் வெர்டே!
Cape Verde: தனது முதல் ஃபிஃபா உலகக் கோப்பையில் போட்டியிட்ட கேப் வெர்டே, மிகவும் கடினமான ஒரு குழுவில் இடம்பெற்றிருந்தாலும், ஒருபோதும் மனம் தளரவில்லை. முதல் போட்டியில், 2010 உலக சாம்பியனான ஸ்பெயினை 0-0 என்ற கோல் கணக்கில் சமன் செய்தது. பின்னர், 2 முறை உலக சாம்பியனான உருகுவேயுடன் 2-2 என்ற பரபரப்பான சமன் ஆட்டத்தில் விளையாடியது.
2026 ஃபிஃபா உலகக் கோப்பையில் (FIFA World Cup 2026) சிறிய நாடான கேப் வெர்டே (Cape Verde) தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் சரித்திரம் படைத்துள்ளது. ஆப்பிரிக்காவின் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள, சுமார் 5,50,000 மக்கள்தொகை கொண்ட இந்தச் சிறிய நாடு, சவூதி அரேபியாவுக்கு எதிராக 0-0 என்ற கோல் கணக்கில் சமன் செய்து, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் , உலகக் கோப்பை வரலாற்றில் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய மிகச்சிறிய நாடு என்ற பெருமையை கேப் வெர்டே பெற்றுள்ளது.
ALSO READ: 40 வயதில் ஸ்பெயினுக்கு எதிரான நங்கூரம்.. ஒரே நாளில் ஹீரோவான கேப் வெர்டே கோல் கீப்பர்!




தோல்வியடையாமல் ஹெவிவெயிட் பிரிவில் கேப் வெர்டே:
தனது முதல் ஃபிஃபா உலகக் கோப்பையில் போட்டியிட்ட கேப் வெர்டே, மிகவும் கடினமான ஒரு குழுவில் இடம்பெற்றிருந்தாலும், ஒருபோதும் மனம் தளரவில்லை. முதல் போட்டியில், 2010 உலக சாம்பியனான ஸ்பெயினை 0-0 என்ற கோல் கணக்கில் சமன் செய்தது. பின்னர், 2 முறை உலக சாம்பியனான உருகுவேயுடன் 2-2 என்ற பரபரப்பான சமன் ஆட்டத்தில் விளையாடியது. 3வது போட்டியில், சவுதி அரேபியா கோல் அடிக்க வாய்ப்பளிக்காமல், 0-0 என்ற கோல் கணக்கில் சமன் செய்து 3 புள்ளிகளைப் பெற்று, குழுவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இதற்கிடையில், ஸ்பெயின் உருகுவேயை வீழ்த்தி குழுவில் முதலிடத்தைப் பிடித்தது. அதேநேரத்தில், கேப் வெர்டே ஒரு லீக் சுற்றில் ஒரு தோல்வியை சந்திக்காமல் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
காலிறுதியில் கேப் வெர்டே யாரை எதிர்கொள்கிறது..?
Cape Verde celebrate history. 🇨🇻
Fans and players together after sealing a historic knockout qualification on their World Cup debut.
Pure emotion. ❤️#WorldCupwithMicky#CapeVerde pic.twitter.com/lHSmGwh9eC
— Micky Jnr (@MickyJnr__) June 27, 2026
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கேப் வெர்டேயின் அடுத்த சவாலாக, நடப்பு உலக சாம்பியனான அர்ஜென்டினாவை எதிர்கொள்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த காலிறுதி போட்டி வருகின்ற 2026 ஜூலை 3ம் தேதி மியாமியில் நடைபெறும். இந்தப் போட்டியில் கேப் வெர்டே ஒரு அதிர்ச்சி வெற்றியைப் பதிவுசெய்தால், ஃபிஃபா உலகக் கோப்பையில் மிகப்பெரிய வரலாறு மாறும்.
ALSO READ: விதிகளை மீறிய நேபாள கால்பந்து அணி.. இடைநீக்கம் செய்த ஃபிஃபா.. காரணம் என்ன?
கேப் வெர்டேவின் வெற்றி பயணத்திற்கு யார் காரணம்..?
40 வயதான கோல்கீப்பர் வோஜின்ஹா, கேப் வெர்டேயின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியில் முக்கியப் பங்காற்றினார். போட்டித்தொடர் முழுவதும் அவரது சிறப்பான ஆட்டங்கள் உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. சவுதி அரேபியாவுக்கு எதிரான போட்டியில், 3 அற்புதமான தடுப்புகளின் மூலம் அவர் தனது அணியைத் தோல்வியிலிருந்து காப்பாற்றினார். முதல் பாதியின் கூடுதல் நேரத்தில், முகமது கன்னோவின் தலையால் முட்டியே பந்தை தடுத்தார். பின்னர், 2ம் பாதியில், முகமது அபு அல்-ஷமாத்தின் அபாயகரமான ஷாட்டை வோஜின்ஹா திறமையாகத் தடுத்தார். 92-வது நிமிடத்தில், அப்துல்லா அல்-ஹம்தானின் கச்சிதமான தடுப்பிலிருந்து கேப் வெர்டே அணியையே காப்பாற்றினார்.