AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

காதல் மனைவி அளித்த பரபரப்பு புகார்.. பரமக்குடி டிஎஸ்பி ஜாபர் சித்திக் திடீர் கைது.. காவல்துறையில் பரபரப்பு!

Paramakudi DSP Jaffer Siddique Arrested : ராமநாதபுரத்தில் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் பரமக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக்கை வேலூர் சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். ஏற்கெனவே அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காதல் மனைவி அளித்த பரபரப்பு புகார்.. பரமக்குடி டிஎஸ்பி ஜாபர் சித்திக் திடீர் கைது.. காவல்துறையில் பரபரப்பு!
பரமக்குடி டிஎஸ்பி ஜாபர் சித்திக் கைது
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 09 Oct 2026 13:08 PM IST

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் காவல் துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் ஜாபர் சித்திக். இவரது மனைவி ஷோபனா. இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் கணவர் ஜாபர் சித்திக் மீது வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில், சிபிசிஐடி அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், டி எஸ் பி ஜாபர் சித்திக்கை சஸ்பெண்ட் செய்து அப்போதைய உள்துறை செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், துணை காவல் கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக்கை சிபிசிஐடி போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, ஜாபர் சித்திக்கின் மனைவி ஷோபனா அளித்த புகாரில்,

கணவருக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு

தனது கணவர் ஜாபர் சித்திக்க்கு பல்வேறு பெண்களுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்து வருகிறது. இது குறித்து அவரிடம் தட்டி கேட்டதற்கு தன்னை அடித்து துன்புறுத்தி சித்திரவதை செய்து வருவதாகவும் தெரிவித்து இருந்தார். அத்துடன், அவர் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் வேலூர் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன் அடிப்படையில், கடந்த ஆகஸ்ட் மாதம் பரமக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்ற சிபிசிஐடி போலீசார் அங்கு தீவிர சோதனை மேற்கொண்டனர்.

மேலும் படிக்க: மாயமான பெண் சடலமாக மீட்ட விவகாரம்.. எஸ்.ஐ. மீது விழுந்த பேரிடி.. அதிரடி காட்டிய திருச்சி எஸ்.பி!!

டிஎஸ்பி ஜாபர் சித்திக் அதிரடி கைது

தொடர்ந்து, டிஎஸ்பி ஜாபர் சித்திக்கிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டிருந்தனர். இதில், போலீசார் பல்வேறு தகவல்களை திரட்டியதாக தெரிகிறது. இதனிடையே, அந்த புகார் தொடர்பாக டிஎஸ்பி ஜாபர் சித்திக் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். இதை தொடர்ந்து, சிபிசிஐடி அதிகாரிகள் நேற்று டிஎஸ்பி ஜாபர் சித்திக்கை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர்

டிஎஸ்பி ஜாபர் சித்திக் என்பவர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவர். போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வரும் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கி வந்தார். தான் காவல்துறையில் டிஎஸ்பி பதவியில் அமர்ந்தது தொடர்பாக பல்வேறு வீடியோக்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: தமிழகத்தில் பயங்கரவாத தாக்குதல் முயற்சி? தஞ்சை- கோவையில் சிக்கிய 7 பேருக்கு தீவிரவாத தொடர்பு.. என்ஐஏ அதிர்ச்சி தகவல்!

Follow Us