AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழகத்தில் பயங்கரவாத தாக்குதல் முயற்சி? தஞ்சை- கோவையில் சிக்கிய 7 பேருக்கு தீவிரவாத தொடர்பு.. என்ஐஏ அதிர்ச்சி தகவல்!

Shahzad Terrorist Organization : தமிழகத்தில் கைதான 7 பேருக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஷாசாத் பட்டி பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்த முழு விவரத்தை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் .

தமிழகத்தில் பயங்கரவாத தாக்குதல் முயற்சி? தஞ்சை- கோவையில் சிக்கிய 7 பேருக்கு தீவிரவாத தொடர்பு.. என்ஐஏ அதிர்ச்சி தகவல்!
கோப்புப்படம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 08 Oct 2026 20:35 PM IST

டெல்லி, கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மக்சூத் அலி என்பவருக்கு தொடர்பு இருப்பதும், அவர் கோயம்புத்தூரில் தங்கி இருந்து கூலி வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது. அதன் அடிப்படையில், தமிழக தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் உதவியுடன், உத்தர பிரதேச தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கடந்த செப்டம்பர் 16- ஆம் தேதி கோவையில் அவரை கைது செய்து உத்தரப்பிரதேசத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு, அவரிடம் நடத்திய விசாரணையில், கோவையில் வேலை செய்வது போல பாகிஸ்தானை சேர்ந்த ஷாசாத் பட்டி பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருந்ததும், தமிழகத்தை சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது.

தஞ்சாவூர்- கோவையில் கைதான 7 பேர்

அதன் அடிப்படையில், தஞ்சாவூர் மற்றும் கோவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஜாகிர் உசேன், யாசர் அப்துல், ஷேக் பரீத், உமர் முக்தர், அப்துல், சம்சுதீன் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இவர்களுடன் தொடர்பில் இருந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தமிழகத்தில் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில். செல்போன்கள். பென் டிரைவ்கள், ஹிஸ்ப்- உத்- தங்ரிர் உள்ளிட்ட அமைப்புகள் தொடர்புடைய 20- க்கும் மேற்பட்ட புத்தகங்கள், மடிக்கணினிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.

மேலும் படிக்க: ரூ.4,730 கோடி மணல் குவாரி முறைகேடு.. தோண்டி துருவிய ED.. சீனில் இறங்கிய DVAC.. பீதியில் திமுக புள்ளிகள்!

ஷாசாத் பட்டி தீவிரவாத அமைப்புடன் தொடர்பு

இதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 7 பேரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தனித்தனியாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி. அதில், கைதானவர்களுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஷாசாத் பட்டி என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த ஷாசாத் பட்டி என்பவர் தொடக்கத்தில் ரௌடியாக செயல்பட்டு, பின்னர் சர்வதேச போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டதுடன், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ஆதரவுடன் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன், ஒரு பயங்கரவாத அமைப்பை உருவாக்கி அதன் மூலம் பல்வேறு நாச வேலைகளை செய்து வருகிறார் என கூறப்படுகிறது.

தமிழகத்தில் நாச வேலைகள் நடத்த திட்டம்

இதில், தொடர்புடைய தமிழக இளைஞர்கள் மூலமாக நாச வேலைகளுக்கு திட்டமிட்டதும், பணம், போதை பொருள், ஆயுதங்கள் கடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இது மட்டும் இன்றி இந்தியாவில் முக்கிய வழிபாட்டுத் தலங்களில் தாக்குதல் நடத்துவதற்கான முயற்சிகளிலும், பாதுகாப்பு தொடர்பான இடங்களை கண்காணிக்க சூரிய சக்தியில் இயங்கும் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி அதனை பாகிஸ்தானில் இருந்து கண்காணித்து வந்ததும் தெரிய வந்துள்ளதாக என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பழனி நில முறைகேடு.. ரகசிய கண்காணிப்பில் சிக்கிய இருவர்.. தட்டி தூக்கிய சிபிசிஐடி போலீசார்!

Follow Us