FIFA World Cup 2026: கருவில் இறந்த குழந்தை.. கோல் அடித்து கண்ணீர் விட்டு அழுத வீரர்.. கண்கலங்க வைத்த வீடியோ!
Cody Gakpo Goal Viral Video: கோல் அடித்த பிறகு, காக்போ எந்தக் கொண்டாட்டத்தையும் மேற்கொள்ளாமல் மைதானத்தில் அமர்ந்து தலை குனிந்து அழுதார். காக்போ அழுவதைக் கண்ட அவரது சக வீரர்கள் அவரை அணைத்துக்கொண்டனர். மைதானத்தில் இருந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் காக்போவுக்கு எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டினர்.
2026 ஃபிஃபா உலகக் கோப்பையில் (FIFA World Cup 2026) தற்போது காலிறுதிக்கு முந்தைய சுற்று நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், பரபரப்பான உலகக் கோப்பைக்கு மத்தில் நிகழ்ந்த ஒரு உணர்ச்சிகரமான தருணம், கால்பந்து ரசிகர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. நெதர்லாந்து நட்சத்திர கால்பந்து வீரரான கோடி காக்போ, பிறக்காத தன் குழந்தையை இழந்திருந்தார். அந்தத் துயரத்தைப் பொருட்படுத்தாமல், காக்போ (Cody Gakpo) தன் அணிக்காக ஒரு கோலை அடித்தார். கோல் வளையத்திற்குள் கோல் அடித்ததும் காக்போவால் தன் கண்ணீரை அடக்க முடியாமல், ஆடுகளத்திலேயே உடைந்து அழுதார். இது தொடர்பான வீடியோ வெளியாகி அனைவரது கண்களையும் குளமாக்கியது.
ALSO READ: 3 போட்டிகளில் 5 கோல்கள்.. மெஸ்ஸி, எம்பாப்பே பட்டியலில் ஹாலண்ட்!




நெதர்லாந்து அணிக்காக முக்கியமான கோல்:
🔴Kısa süre önce bebeğini kaybettiğini açıklayan Cody Gakpo, Fas’a attığı golden sonra gözyaşlarını tutamadı pic.twitter.com/iUQQH404Rq
— İlke TV (@ilketvcomtr) June 30, 2026
கோடி காக்போ தற்போது ஃபிஃபா உலகக் கோப்பையில் நெதர்லாந்து கால்பந்து அணிக்காக விளையாடி வருகிறார். இந்த மகிழ்ச்சிகரமான விஷயத்திற்கு மத்தியில், அவரது குடும்பம் துயரத்தில் மூழ்கியுள்ளது. கடந்த ஜூன் 28ம் தேதி, அவரது மனைவி நோவா வான் டெர் பீஸ் கருச்சிதைவுக்கு உள்ளானதால், அவர்களது மகனை இழந்தார். இந்தத் துயரத்திற்கு மத்தியிலும், காக்போ தனது அணிக்குத் தன்னை அர்ப்பணித்து, தொடர்ந்து விளையாடினார்.
மேலும் காக்போ அந்தப் போட்டியில் தனது அணிக்காக ஒரு முக்கியமான கோலையும் அடித்தார். 72-வது நிமிடத்தில், கிரெசென்சியோ சம்மர்வில் செய்த ஃபவுலுக்குப் பிறகு, அந்த விங்கர் பந்தை காக்போவிடம் பாஸ் செய்தார். அவர் எந்தத் தவறும் செய்யாமல், மொராக்கோவின் புகழ்பெற்ற கோல்கீப்பரான யாசின் போனோவை கடந்து சென்று, பந்தை தலையால் முட்டி வலைக்குள் தள்ளினார். இது நெதர்லாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் எழுந்து நின்று கைதட்டல்:
கோல் அடித்த பிறகு, காக்போ எந்தக் கொண்டாட்டத்தையும் மேற்கொள்ளாமல் மைதானத்தில் அமர்ந்து தலை குனிந்து அழுதார். காக்போ அழுவதைக் கண்ட அவரது சக வீரர்கள் அவரை அணைத்துக்கொண்டனர். மைதானத்தில் இருந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் காக்போவுக்கு எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டினர். இந்தத் தருணம், 2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் வரலாற்றில் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான தருணங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
மொராக்கோ 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி:
பெனால்டி ஷூட் அவுட்டில் நெதர்லாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் மொராக்கோ காலிறுதிக்கு முன்னேறியது. 90 நிமிட ஆட்ட முடிவில் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. 72-வது நிமிடத்தில் நெதர்லாந்து அணிக்காக கோடி காக்போ கோல் அடித்து, கோல் கணக்கை 1-0 என மாற்றினார்.
ALSO READ: நார்வே போட்டிக்கு முன்பு நெருக்கடியில் பிரேசில்.. காயத்தால் நட்சத்திர வீரர் விலகல்!
கூடுதல் நேரத்தின் 90வது நிமிடத்தில் மொராக்கோ அணிக்காக இசா டியோப் கோல் அடித்து ஆட்டத்தைச் சமன் செய்தார். பின்னர், பெனால்டி ஷூட் அவுட் மூலம் வெற்றி பெற்ற அணி தீர்மானிக்கப்பட்டது. பெனால்டி ஷூட் அவுட்டின் போது சிறிது நேரம் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. ஆனால், மொராக்கோ அணி நிதானத்தைக் கடைப்பிடித்து 3-2 என்ற கோல் கணக்கில் போட்டியை வென்றது. அதே நேரத்தில், பெனால்டி நேரத்தில் நெதர்லாந்து வீரர்கள் 2 கோல்களை அடிக்க தவறியதால், போட்டியிலிருந்து வெளியேறினர்.