AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

FIFA World Cup 2026: கேப் வெர்டே அதிர்ச்சி தோல்வி.. களத்திலேயே அழுத வீரர்.. ஆறுதல் கூறி கண்ணீர் வடித்த குடும்பம்!

Cape verde vs Argentina: தமிழ்நாட்டின் மக்கள் தொகையே கிட்டதட்ட 8 கோடி மக்கள் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில், கேப் வெர்டே 5 லட்சத்திற்கும் சற்று அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட ஒரு சிறிய தீவு ஆகும்,. கூடுதல் நேரத்திலும், கேப் வெர்டே அணி அர்ஜென்டினாவை விட சிறப்பாக விளையாடியது. மேலும் ஒரு கட்டத்தில், இறுதி நிமிடங்கள் வரை ஆட்டம் 2-2 என சமநிலையில் இருந்தது.

FIFA World Cup 2026: கேப் வெர்டே அதிர்ச்சி தோல்வி.. களத்திலேயே அழுத வீரர்.. ஆறுதல் கூறி கண்ணீர் வடித்த குடும்பம்!
கேப் வெர்டே வீரர் அழுகை
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 04 Jul 2026 19:08 PM IST

2026 ஃபிஃபா உலகக் கோப்பையை (FIFA World Cup 2026) யார் வென்றாலும், மிக சிறிய நாடான கேப் வெர்டே இந்த உலகக் கோப்பையில் ஒரு அழியாத முத்திரையைப் பதித்துள்ளது. இன்று அதாவது 2026 ஜூலை 4 ம் தேதி நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அர்ஜென்டினாவிடம் 3-2 என்ற கோல் கணக்கில் தோற்று, 2026 ஃபிஃபா உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது. ஃபிஃபா உலகக் கோப்பை வரலாற்றில் கேப் வெர்டே (Cape Verde) முதல் முறையாக உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றிருந்தது. இருப்பினும், அர்ஜெண்டினாவுக்கு எதிரான போட்டியின் கடைசி நிமிடத்தில் நடுவர் இறுதி விசில் ஊதியபோது, கேப் வெர்டே ​​ஃபார்வேர்ட் வீரர் நூனோ டா கோஸ்டாவால் தங்களது அணியின் தோல்வியை தாங்க முடியாமல், தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான மனதில் ஒரு நிமிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ALSO READ: இதுதான் ரொனால்டோவின் கடைசி உலகக் கோப்பையா? அவரது சகோதரி சொன்ன ஷாக் நியூஸ்!

கேப் வெர்டே அணியின் வீரர்கள் அனைவரும் முழுவதும் மனமுடைந்து காணப்பட்டனர். அதேநேரத்தில், ஃபார்வெர்ட் வீரர் நூனோ டா கோஸ்டா ஒரு மூலையில் அமர்ந்து விம்மி விம்மி அழுது கொண்டிருந்தார். கோஸ்டாவின் இந்த உணர்ச்சிப் பெருக்கின்போது அவரது மனைவியும் மகனும் அவருக்கு ஆறுதல் கூற வந்தனர். இதற்கிடையில், கோஸ்டாவின் மகன் லூயிஸும் விம்மி விம்மி அழுவது காணப்பட்டது.

குறைவான மக்கள் தொகை கொண்ட நாடு:


தமிழ்நாட்டின் மக்கள் தொகையே கிட்டதட்ட 8 கோடி மக்கள் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில், கேப் வெர்டே 5 லட்சத்திற்கும் சற்று அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட ஒரு சிறிய தீவு ஆகும்,. கூடுதல் நேரத்திலும், கேப் வெர்டே அணி அர்ஜென்டினாவை விட சிறப்பாக விளையாடியது. மேலும் ஒரு கட்டத்தில், இறுதி நிமிடங்கள் வரை ஆட்டம் 2-2 என சமநிலையில் இருந்தது. இருப்பினும், அர்ஜென்டினா ஒரு அதிர்ச்சித் தோல்வியை தவிர்க்க, 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.

ALSO READ: 16 அணிகள் மட்டுமே! ஃபிஃபா உலகக் கோப்பை 2026 நாக் அவுட் அட்டவணை விவரம்!

32 சுற்றுக்கு முன்னேறிய சிறிய நாடு:

கேப் வெர்டே ஃபார்வெர்ட் வீரர் நூனா டா கோஸ்டா, அவரது மனைவி மற்றும் மகனின் புகைப்படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. இந்தப் படங்கள் உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களின் இதயங்களைத் தொட்டுள்ளன. கேப் வெர்டே குழுச் சுற்றில் தோல்வியடையவில்லை, ஆனால் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. உண்மையில், ஸ்பெயின், உருகுவே மற்றும் சவுதி அரேபியா ஆகிய 3 பலம் வாய்ந்த அணிகளை சமன் செய்ததன் மூலம் அது 32 அணிகள் கொண்ட சுற்றில் ஒரு இடத்தைப் பிடித்தது.

Follow Us