Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Freedom: மீண்டும் ‘ப்ரீடம்’ படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு.. சோகத்தில் ரசிகர்கள்!

Sasikumars Freedom Movie Release postponed : நடிகர் சசிகுமாரின் முன்னணி ரிலீசிற்கு காத்திருந்த திரைப்படம் ப்ரீடம். இந்த படமானது உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. சத்ய சிவாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், 2025 ஜூலை 10ம் தேதியில் வெளியாகவிருந்த நிலையில், ரிலீஸ் தள்ளிப்போனது.

Freedom: மீண்டும் ‘ப்ரீடம்’ படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு.. சோகத்தில் ரசிகர்கள்!
சசிகுமாரின் ப்ரீடம் திரைப்படம் Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 18 Jul 2025 12:18 PM

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவர்தான் சத்யசிவா (Sathyasiva). இவரின் இயக்கத்தில் தமிழில் இதுவரை கழுகு (Kazhugu), சிவப்பு மற்றும் சவாலே சமாளி என 3 படங்கள் வெளியாகியிருக்கிறது. இந்த படங்களில் வரிசையில் உருவாகியுள்ள புதியத் திரைப்படம்தான் ப்ரீடம் (Freedom). இந்த படத்தில் முன்னணி கதாநாயகனாக நடிகர் சசிகுமார் (Sasikumar) நடித்துள்ளார். மேலும் அவருக்கு ஜோடியாக நடிகை லிஜோமோல் ஜோஸ் (Lijomol Jose) இணைந்து நடித்துள்ளார். இந்த திரைப்படமானது இலங்கைத் தமிழர்களின் (Sri Lankan Tamils) வாழ்க்கை குறித்தும், இலங்கைத் தமிழர்களின் சிறைச்சாலை கஷ்டங்களைக் குறித்தும் இப்படமானது உருவாகியுள்ளதாக சசிகுமார் கூறியிருந்தார். இந்த படமானது கடந்த 2025, ஜூலை 10ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திரையரங்குகள் கிடைக்காததால் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

மேலும் இப்படம் 2025, ஜூலை 18ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படக்குழு ரிலீஸ் தாமதம் குறித்தும், இப்படத்தின் ரிலீஸ் எப்போது என்பது குறித்தும் அறிவித்துள்ளது. இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : அதர்வாவின் அதிரடி திரில்லர்.. ‘தணல்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்த படக்குழு!

ப்ரீடம் படம் ரிலீஸ் ஒத்திவைப்பு படக்குழு வெளியிட்ட அறிவிப்பு :

அதில் படக்குழு சசிகுமார் மற்றும் லிஜோமோல் ஜோசின் நடிப்பிலும், இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் மற்றும் விஜய கணபதி பிக்ச்சர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள படம் ப்ரீடம். இப்படம் கடந்த 2025 ஜூலை 10ம் தேதியில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக, படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனப் படக்குழு அந்த பதிவில் அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க : இன்று ஒரே நாளில் வெளியான 14 படங்கள்.. விவரம் இதோ!

ப்ரீடம் படத்தின் கதைக்களம் என்ன :

சசிகுமார் மற்றும் லிஜோமோல் ஜோஸின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படமானது முழுக்க, இலங்கை அகதிகள் பற்றிய கதைக்களமாக உருவாகியுள்ளது. தமிழகத்தில் அகதிகளாக வந்த இலங்கை தமிழர்களுக்கு நடக்கும் அநியாயம் குறித்தும், அவர்கள் படும் கஷ்டம் பற்றியும் இப்படம் உருவாகியுள்ளது. மேலும் சிறைச்சாலையில் கைதிகள் படும் கஷ்டங்கள் குறித்தும் இப்படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த ப்ரீடம் படமானது உண்மை சம்பவத்தை வைத்து உருவாக்கியிருப்பதாக நடிகர் சசிகுமார் இப்படத்தின் ப்ரீ- ரிலீஸ் நிகழ்ச்சியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.