Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Thanal: அதர்வாவின் அதிரடி திரில்லர்.. ‘தணல்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்த படக்குழு!

Athrvaas Thanal Movie Release Date Update : தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் அதர்வா. இவரின் நடிப்பில் உருவாகிவந்த திரைப்படம்தான் தணல். இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. அது குறித்துப் பார்க்கலாம்.

Thanal: அதர்வாவின் அதிரடி திரில்லர்.. ‘தணல்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்த படக்குழு!
அதர்வாவின் தணல் திரைப்படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 17 Jul 2025 22:18 PM

நடிகர் அதர்வாவின் (Athrvaa) நடிப்பில் கோலிவுட் சினிமாவில் இறுதியாக வெளியான திரைப்படம் டிஎன்ஏ (DNA). இந்த திரைப்படத்தைத் தமிழ் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியிருந்தார். அதிரடி குற்றம் திரில்லர் கதைக்களத்துடன் இப்படம் உருவாகியிருந்தது. இதில் அதர்வாவிற்கு ஜோடியாக நடிகை நிமிஷா சஜயன் நடித்திருந்தார். இந்தப் படமானது கடந்த 2025, ஜூன் 20ம் தேதியில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அதர்வா நடித்துவந்த படம்தான் தணல் (Thanal). இந்த படத்தை இயக்குநர் ரவீந்திர மாதவா (Ravindra Madhava) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படமும் குற்றம் திரில்லர் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் அதர்வா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியிருக்கும் இப்படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. இந்த படமானது வரும் 2025 ஆகஸ்ட் 29 தேதியில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : ‘கூலி’ படத்தின் கதை இதுவா? இணையத்தில் கசிந்த தகவல்!

அதர்வாவின் தணல் படக்குழு அறிவித்த ரிலீஸ் தேதி பதிவு :

அதர்வாவின் தணல் திரைப்படம் :

இந்த படத்தை இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்க, அன்னம் பிலிம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படமானது தயாராகி சுமார் 2 வருடங்களுக்குப் பின் தற்போது வெளியாகவுள்ளது. இந்த படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடிகை லாவண்யா திரிபாதி நடித்துள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் பிரம்மன் மற்றும் மாயவன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் பிரபல தெலுங்கு நடிகை ஆவார். மேலும் இவர்களுடன் நடிகர்கள், அஸ்வின், பிரதீப் விஜயன், சர்வா, போஸ் வெங்கட் உட்படப் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது வரும் 2025, ஆகஸ்ட் 29ம் தேதியில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கவினுடன் ஜோடியாகும் பிரியங்கா மோகன்.. புதிய படத்தின் அப்டேட் இதோ!

அதர்வாவின் புதிய படங்கள் :

நடிகர் அதர்வாவின் நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படமும், இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் இதயம் முரளி படமும் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்த இரு படங்களும் இந்த 2025ம் ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் இவரின் நடிப்பில் அட்ரஸ் படமானது தயாராகிவரும் நிலையில், இப்படத்திலிருந்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் அதர்வாவின் நடிப்பில் மட்டும் கிட்டத்தட்ட 3 திரைப்படங்கள் ரிலீசிற்கு தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.