Sudha Kongara : அதர்வாவின் அருமையான நடிப்பு.. டிஎன்ஏ படக்குழுவைப் பாராட்டிய சுதா கொங்கரா!
Sudha Kongara Praises Atharvaas DNA Movie : தமிழ் சினிமாவில் கடந்த 2025, ஜூன் 20ம் தேதியில் வெளியான படம் டிஎன்ஏ. நடிகர் அதர்வாவின் முன்னணி நடிப்பில் வெளியாகியிருக்கும் இப்படமானது பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று திரையரங்குகளில் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இந்த டிஎன்ஏ படக்குழுவை இயக்குநர் சுதா கொங்காரா பாராட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோவாக வலம்வருபவர் அதர்வா (Athrvaa). இவர் கடந்த 2010ம் ஆண்டு வெளியான பானா காத்தாடி (Baana Kaaththadi) என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். இந்த படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து சினிமாவில் அடுத்தடுத்த படங்களிலும் முன்னணி நாயகனாக நடித்திருந்தார். இவர் நடிகர் முரளியின் (Murali) மூத்த மகன் என்பதால் மக்கள் மத்தியிலும் இவருக்கு வரவேற்புகள் கிடைக்கத் தொடங்கியது. இந்நிலையில் இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டிஎன்ஏ (DNA). இந்த திரைப்படத்தை ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தை இயக்கியிருந்த இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் (Nelson Venkatesan) இயக்கியுள்ளார். இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட திரைக்கதைகளுடன் வெளியாகி திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த டிஎன்ஏ திரைப்படத்தில் அதர்வா முன்னணி நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை நிமிஷா சஜயன் (Nimisha Sajayan) நடித்திருந்தார். இப்படமானது திரையரங்குகளில் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) படக்குழுவைப் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவரே தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.




டிஎன்ஏ படக்குழுவைப் பாராட்டி இயக்குநர் சுதா கொங்கரா வெளியிட்ட பதிவு
Just saw a little gem of a film !! Fantastic writing as always #nelsonvenkatesan and superb performances by @Atharvaamurali, #Nimishasajayan, #chetan, #Balajisakthivel and the paatti…oh my!!!
Teared up and cheered with the audiences! A beauty –#DNA— Sudha Kongara (@Sudha_Kongara) June 23, 2025
இந்த பதிவில் இயக்குநர் சுதா கொங்கரா, “நான் ஒரு அருமையான படத்தைப் பார்த்திருந்தேன். எப்போதும்போல இயக்குநர் நெல்சன் வெங்கடேசனின் எழுத்து மிகவும் அருமையாக இந்த டிஎன்ஏ படத்தில் உள்ளது. மேலும் இப்படத்தில் அதர்வா, நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல் மற்றும் அந்த பாட்டியின் நடிப்பும் மிகவும் அருமையாக இருந்தது. மேலும் இப்படத்தை நானும் பார்வையாளர்களுடன் பார்த்து கண்ணீர் விட்டேன் மிகவும் அருமையான திரைப்படம் டிஎன்ஏ” என இயக்குநர் சுதா கொங்கரா பாராட்டியுள்ளார்.
அதர்வா மற்றும் சுதா கொங்கரா கூட்டணி :
இயக்குநர் சுதா கொங்கராவின் முன்னணி இயக்கத்தில் உருவாகிவரும் படம் பராசக்தி. இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் முன்னணி நாயகனாக நடித்து வரும் நிலையில், அவருடன் அதர்வா, ரவி மோகன் மாறும் ஸ்ரீ லீலா எனப் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்தில் நடிகர் அதர்வா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் சிவகார்த்திகேயனுக்கு அடுத்ததாக அதர்வாவின் ரோல் மிகவும் முக்கிய பங்காற்றுகிறது என்று கூறப்படுகிறது.
இந்த படத்தின் 60 சதவீதம் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், மேலும் இன்னும் 2 மாதத்தில் இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துவிடும் என்று நடிகர் அதர்வாவே சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமானது வரும் 2026ம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.