Ajith Kumar : நான் அஜித் சாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் .. 3BHK பட இயக்குநர் நெகிழ்ச்சி!
Director Sri Ganesh About Ajith Kumar : தமிழ் சினிமாவில் பிரபல வளர்ந்துவரும் இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் ஸ்ரீ கணேஷ். இவரின் இயக்கத்தில் 3BHK திரைப்படமானது உருவாகியிருக்கும் நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர் அஜித்திற்கு நன்றி சொல்ல விரும்புவதாகப் பேசியுள்ளார். அதை பற்றி விவரமாகப் பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் நடிகர்கள் சித்தார்த் (Siddharth ) மற்றும் சரத்குமார் (Sarathkumar) கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம்தான் 3BHK. இந்த படத்தை வளர்ந்துவரும் இயக்குநர் ஸ்ரீ கணேஷ் (Sri Ganesh) இயக்கியுள்ளார். இந்த படமானது முழுமையாக குடும்ப கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகை தேவயானி (Devayani) மற்றும் மீத்தா ரகுநாத் (Meetha Raghunath) முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படமானது முழுமையாக குடும்பம் சார்ந்த கதைக்களத்துடன் உருவாகியிருக்கிறது. இந்த படமானது வரும் 2025, ஜூலை 4ம் தேதியில் திரையங்குகளில் வெளியாகவுள்ளது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார். இப்படத்திலிருந்து இதுவரை 2 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து இந்த படமானது இன்னும் சில நாட்களில் வெளியாகவிருக்கும் நிலையில், டிரெய்லர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் தொடர்பாக நடிகர்கள் சித்தார்த் மற்றும் ஸ்ரீகணேஷ் என படக்குழுவினர் நேர்காணல்களில் கலந்துகொண்டு வருகின்றனர். இதில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் ஸ்ரீகணேஷ், “நான் எப்போதும் நடிகர் அஜித் குமார் (Ajith kumar) சாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்” என்று பேசியுள்ளார். இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.




3BHK படக்குழு வெளியிட்ட பாடல் பதிவு :
If you’re after something greater, don’t stop. Your dreams are closer than you think. 🌟#aagiponunenu out today! ⛈️🌀
Music by @amritramnath23
Sung & Perfomed by #devatheveda#3BHK #3BHKtelugu #3BHKSecondSingle #3BHKfromJULY4#Siddharth @realsarathkumar @sri_sriganesh89… pic.twitter.com/X8l10ldGlE
— Shanthi Talkies (@ShanthiTalkies) June 23, 2025
அஜித் குமார் பற்றி இயக்குநர் ஸ்ரீ கணேஷ் பேச்சு :
அந்த நேர்காணலில் பேசிய இயக்குநர் ஸ்ரீ கணேஷ், “நான் அஜித் சாருக்கு நன்றி சொல்லப் பல காரணங்கள் இருக்கிறது. குறிப்பாக நான் இந்த 3BHK படத்தை இயக்கியதற்கு அவர் ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு படம் உருவாகவேண்டும் என்றால் அதன் பின் பல விஷயங்கள் இருக்கிறது, அதற்காகப் பல கோடி பட்ஜெட் முதலீடு செய்யவேண்டியது இருக்கும். மேலும் நான் அஜித் குமாருடன் படம் பண்ணவேண்டுமென்றால், அந்த அளவிற்கு எனது லெவலை நான் வளர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் எனது இந்த 3BHK திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படம் ஒரு நல்ல அனுபவத்தைக் கொடுக்கும். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மேலும் சில படங்களும் வரவேற்பைப் பெற்றால் என்னால் அஜித் குமார் சார் உடன் நிச்சயமாக ஒரு படம் பண்ண முடியும். அஜித் சாருடன் படம் பண்ண நான் விரும்புகிறேன்” என்று இயக்குநர் ஸ்ரீ கணேஷ் பேசியுள்ளார்.