Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Rashmika Mandanna : தனுஷ் சாரின் நடிப்பைப் பார்த்து வியந்தேன்.. குபேரா பட வெற்றி விழாவில் ராஷ்மிகா பேச்சு!

Rashmika Mandanna praised Dhanush At Kuberaa Success Meet : தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம்வரும், தனுஷின் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் குபேரா. இந்த படமானது கடந்த 2025, ஜூன் 20ம் தேதியில் வெளியாகியிருந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிபெற்ற நிலையில், இன்று 2025, ஜூன் 22ம் தேதியில் நடைபெற்ற வெற்றிவிழாவில் ராஷ்மிகா மந்தனா, தனுஷின் நடிப்பைப் புகழ்ந்துள்ளார்.

Rashmika Mandanna : தனுஷ் சாரின் நடிப்பைப் பார்த்து வியந்தேன்.. குபேரா பட வெற்றி விழாவில் ராஷ்மிகா பேச்சு!
ராஷ்மிகா மந்தனாImage Source: X
barath-murugan
Barath Murugan | Published: 22 Jun 2025 21:29 PM

பான் இந்திய நடிகர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் தனுஷ் (Dhanush). இவர் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். இவரின் முன்னணி நடிப்பில் தெலுங்கு மற்றும் தமிழ் மொழியை அடிப்படியாகக் கொண்டு உருவாகியிருக்கும் திரைப்படம் குபேரா (Kuberaa) . இந்த திரைப்படத்தை டோலிவுட் இயக்குநர் சேகர் கம்முலா (Sekhar Kammula) இயக்க, தேவி ஸ்ரீ பிரசாத் (Devi Sri Prasad) இசையமைத்துள்ளார். இந்த படமானது பான் இந்திய மொழிகளில் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் தனுஷ் முன்னணி கதாநாயகனாக நடிக்க முக்கிய வேடங்களில் நாகார்ஜுனா (Nagarjuna) ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna), ஜிம் ஷார்ப், சுனைனா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் நாகார்ஜுனா கதாபாத்திரமும் மிக முக்கிய பங்காற்றியிருக்கிறது. இந்த படமானது கடந்த 2025, ஜூன் 20ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகி பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்று வருகிறது.

மக்களிடையே பாசிடிவ் விமர்சனங்களைப் பெற்றுவரும் நிலையில், இன்று 2025, ஜுன் 22ம் தேதியில் ஹைதராபாத்தில் குபேரா படக்குழு வெற்றி விழாவைக் (Kuberaa Movie Success Ceremony)  கொண்டாடியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, மற்றும் நாகார்ஜுனனா எனக் குபேரா படக்குழு அனைவரும் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகை ராஷ்மிகா மந்தனா, “குபேரா படத்தில் தனுஷின் நடிப்பைப் பார்த்து வியந்ததாகப் பேசியுள்ளார்.

குபேரா பட வெற்றி விழா தொடர்பாகப் படக்குழு வெளியிட்ட பதிவு :

 

குபேரா பட வெற்றி விழாவில் தனுஷின் நடிப்பைப் புகழ்ந்த ராஷ்மிகா மந்தனா :

தனுஷின் இந்த குபேரா திரைப்படத்தின் வெற்றி விழா, இன்று 2025, ஜூன் 22ம் தேதியில் ஹைதராபாத்தில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கலந்துகொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் மேடையில் பேசிய நடிகை ராஷ்மிகா மந்தனா, தனுஷின் நடிப்பைப் புகழ்ந்துள்ளார், அவர் அதில், “இந்தக் குபேரா படத்தில் எனது கதாபாத்திரம் கிளாமர் போன்ற காட்சிகள் இல்லாமல், என்னை அருமையாக நடிக்க வைத்தார் சேகர் கம்முலா சார், அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளைக் கூறுகிறேன்.

மேலும் இந்த குபேரா படத்தில் தனுஷ் சார் பற்றிச் சொல்லவேண்டும் என்றால், அந்த படத்தை முழுவதுமாக பார்த்துவிட்டு, நான் தனுஷ் சாருக்கு, “அதில் ஓ மை காட், ஓ மை காட்” என்றுதான் மெசேஜ் அனுப்பினேன். எனக்கு எப்போது தனுஷ் சார் மிகவும் பிடிக்கும், நான் தனுஷுடன் ஒரு படத்தில் நடித்திருந்தாலும் அவரை எனக்கு சக நடிகராக மிகவும் பிடிக்கும்.  அவரின் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும், ஏற்படும் மாற்றத்தைக் காண்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.” என்று நடிகை ராஷ்மிகா மந்தனா ஓபனாக பேசியிருந்தார்.