Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Jana Nayagan: ஜன நாயகன் கிளிம்ப்ஸ் வீடியோ.. கோலிவுட் சினிமாவில் புதிய சாதனை!

Jana Nayagan Glimpse Video Sets Record : தமிழ் சினிமாவில் வரும் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்குப் பிரம்மாண்ட திரைப்படமாக ரிலீசிற்கு காத்திருப்பது ஜன நாயகன் திரைப்படம். இப்படத்தில் முதல் க்ளிப்ம்ஸ் வீடியோ, நேற்று 2025, ஜூ ன் 22ம் தேதி தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான நிலையில், ஒரே நாளில் 32.4 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

Jana Nayagan: ஜன நாயகன் கிளிம்ப்ஸ் வீடியோ.. கோலிவுட் சினிமாவில் புதிய சாதனை!
விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 23 Jun 2025 12:21 PM

தளபதி விஜய்யின் (Thalapathy Vijay)  முன்னணி நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக உருவாகி வருவது ஜன நாயகன் (Jana Nayagan) . இந்த படத்தில் நடிகர் தளபதி விஜய் போலீஸ் அதிகாரியாக (police officer) நடித்துள்ளார். இந்த படமானது ஆரம்பத்தில் தளபதி 69 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதைத் தொடர்ந்து கடந்த 2025, ஜனவரி மாதத்தில் இப்படத்தின் டைட்டில் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. விஜய்யின் இந்த படத்தில் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஹெச். வினோத் (H. Vinoth) இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே அஜித் குமாரின் வலிமை மற்றும் துணிவு போன்ற அதிரடி ஆக்ஷ்ன் படங்களை இயக்கியிருக்கிறார். அதை தொடர்ந்து தளபதி விஜய்யின் இறுதி திரைப்படமான இந்த ஜன நாயகன் படத்தையும் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் முதல் அறிமுக வீடியோ கடந்த 2025, ஜூன் 22ம் தேதி தளபதி விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது.

நள்ளிரவில் வெளியான 15 நிமிடத்தில் 1 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்திருந்தது. அதைத் தொடர்ந்து ஒரு நாள் முடிவில் இப்படத்தில் கிளிம்ப்ஸ் வீடியோ சுமார் 32. 4 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. கோலிவுட் சினிமாவிலே ஒரே நாளில் அதிகம் பார்வைகளைப் பெற்ற படத்தில் அறிமுக வீடியோவாக இந்த ஜன நாயகன் படம் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான பதிவை ஜன நாயகன் படக்குழு வெளியிட்டுள்ளது.

ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட கிளிம்ப்ஸ் பார்வைகள் பதிவு :

ஜன நாயகன் படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயர் :

இந்த ஜன நாயகனைப் படமானது தளபதி விஜய்யின் இறுதி திரைப்படமாகக் கருதப்படும் நிலையில், இந்த படமானது மிகப் பிரம்மாண்ட படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தைக் கன்னட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்சன்ஸ் தயாரித்து வருகிறது. இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் இப்படமானது தெலுங்கு படமான பகவந்த் கேசரியின் ரீமேக் என்று கூறப்பட்டு வரும் நிலையில், ரசிகர்கள் அதையெல்லாம் தாண்டி அப்படத்தை வெகுவாக எதிர்பார்த்து வருகின்றனர். இந்த படத்தில் விஜய்,  “தளபதி வெற்றி கொண்டான்” எனக் கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த பெயரைச் சுருக்கினால் “TVK” என்று வரும் நிலையில், இப்படத்தில் அரசியலும் நிச்சயம் இருக்கிறது என்பது தெரிகிறது.

ஜன நாயகன் பட எதிர்பார்ப்பு :

தளபதி விஜய்யின் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். பீஸ்ட் படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து இந்த ஜோடி இப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர்கள் நரேன், பிரகாஷ் ராஜ், பாபி தியோல், பிரியாமணி, மமிதா பைஜூ மற்றும் டீஜெய் எனப் பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். விஜய்யின் இறுதி திரைப்படம் என்பதால் ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியில் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.