Trisha Krishnan : ஹேப்பி பர்த்டே பெஸ்டஸ்ட்.. தளபதி விஜய்க்குப் பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய திரிஷா!
Trisha Krishnan Wishes Thalapathy Vijay : தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர பிரபலமாக இருந் வருபவர் நடிகை திரிஷா கிருஷ்ணன். இவர் நேற்று 2025, ஜூன் 22ம் தேதியில் தளபதி விஜய்க்குப் பிறந்தநாள் வாழ்த்து கூறும்வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். தற்போது அப்பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக வெளியான திரைப்படம் தக் லைஃப் (Thug Life). மணிரத்னத்தின் (Mani Ratnam) இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சிலம்பரசன் (Silambarasan) மற்றும் கமல்ஹாசனுடன் (Kamal Haasan) இணைந்தது நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2025, ஜூன் 5ம் தேதியில் திரையரங்குகளில் வெளியானது. இப்படமானது கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை திரிஷா கடந்த 2025, ஜூன் 22ம் தேதியில் தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு, பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் நடிகை திரிஷா, “ஹேப்பி பர்த்டே பெஸ்டஸ்ட்” (Happy Birthday Bestest) என்று எழுதியிருந்தார்.
மேலும் நடிகை திரிஷா கிருஷ்ணன் மற்றும் தளபதி விஜய்யும் நல்ல நண்பர்களாக இருந்து வரும் நிலையில், தற்போது இது தொடர்பான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்களும் இப்பதிவின் கீழ் தங்களின் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.




நடிகை திரிஷா கிருஷ்ணன் வெளியிட்ட விஜய் பிறந்தநாள் வாழ்த்து பதிவு :
Happy Birthday bestest🤗🧿 pic.twitter.com/K4JFdIZXjn
— Trish (@trishtrashers) June 22, 2025
தளபதி விஜய்க்கு வாழ்த்து சொன்ன திரிஷா கிருஷ்ணன் :
தளபதி விஜய்யின் 51வது பிறந்தநாளை நேற்று 2025, ஜூன் 22ம் தேதியில் கொண்டாடப்பட்டது. இதற்குப் பல நட்சத்திர பிரபலங்கள் விஜய்க்கு வாழ்த்துக் கூறி பதிவை வெளியிட்டிருந்தனர். மேலும் நடிகை திரிஷாவும் இறுதியாக இரவில் விஜய்க்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் வண்ணம் தனது சமூக ஊடகத்தில் “ஹேப்பி பர்த்டே பெஸ்டஸ்ட்” என்று, விஜய்யுடன் இருக்கும் புகைப்பட பதிவை வெளியிட்டு விஜய்க்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
திரிஷா மற்றும் விஜய்யின் நட்பு :
தளபதி விஜய் தமிழ் சினிமாவையும் கடந்து, பான் இந்திய பிரபல நடிகராக வலம்வருகிறார். இவரின் நடிப்பில் இதுவரை தமிழில் சுமார் 68 திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. இதில் நடிகை திரிஷாவுடன் நடித்த பல பாடங்கள் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றிருக்கிறது. திரிஷா மற்றும் விஜய்யின் நடிப்பில் முதலில் வெளியான திரைப்படமாகக் கடந்த 2004ம் ஆண்டு ரிலீசான கில்லி திரைப்படம் அமைந்தது.
இந்த திரைப்படத்திலிருந்து இவர்கள் இருவரின் நட்பும் தொடங்கியது. அதைத் தொடர்ந்து திருப்பாச்சி, ஆதி, குருவி மற்றும் லியோ என அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடித்து வெற்றி கொடுத்திருக்கின்றனர். திரைப்படங்களின் தொடர்ச்சியைப் போல இவர்கள் இருவரின் நட்பும் தொடர்ச்சியாக தற்போது வரையிலும் இருந்து வருகிறது.
லியோ வெற்றி :
நடிகர் தளபதி விஜய் மற்றும் த்ரிஷாவின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் லியோ. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த நிலையில், இந்த படத்தில் தளபதி விஜய்யின் மனைவி கதாபாத்திரத்தில் திரிஷா இணைந்து நடித்திருந்தார். கடந்த 2023ம் ஆண்டு வெளியான இப்படம் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சுமார் ரூ 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை பிடித்திருந்தது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யின் நடிப்பில் இறுதியாக வெளியான தி கோட் படத்தில் மட்ட என்ற பாடலுக்கு விஜய்யுடன் நடனமாடியிருந்தார். அதுவும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.