Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kamal Haasan : மாஸ் காம்போ… கமல்ஹாசனின் அடுத்த படத்தை இயக்கப்போகிறவர் இவரா?

Kamal Haasan Next Movie Update ; தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களைக் கொடுத்து வருபவர் கமல்ஹாசன். இவரின் நடிப்பில் இறுதியாக தக் லைஃப் படமானது வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படத்தை தொடர்ந்து அன்பறிவ் இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து மேலும் ஒரு இயக்குநர் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளாராம்.

Kamal Haasan : மாஸ் காம்போ… கமல்ஹாசனின் அடுத்த படத்தை இயக்கப்போகிறவர் இவரா?
நடிகர் கமல் ஹாசன் Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 23 Jun 2025 21:08 PM

தென்னிந்திய சினிமாவின் உச்சத்தில் இருந்து வருபவர் கமல்ஹாசன் (Kamal Haasan) . இவரின் நடிப்பில் இதுவரை மொத்தம் 234 திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. இவரின் நடிப்பில், பான் இந்திய திரைப்படமாக வெளியாகியிருந்தது தக் லைஃப் (Thug Life). இந்த படத்தில் கதையைக் கமல்ஹாசன் எழுத, இயக்குநர் மணிரத்னம் (Mani Ratnam) இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் இப்படமானது கடந்த 2025, ஜூன் 5ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் முன்னணி நாயகனாக நடிக்க, அவருடன் சிலம்பரசனும் (Silambarasan)முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும் திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) மற்றும் அபிராமி என இரு நடிகைகள் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்திருந்தனர். இந்த படமானது வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. இந்த படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன், இயக்குநர்களான அன்பறிவ் (Anbariv) இயக்கத்தில் 237வது படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தை தொடர்ந்து மேலும் ஒரு ஹிட் இயக்குநர் ஒருவரின் படத்தில் இணைத்துள்ளதாகத் தகவல் வெளியாகிவருகிறது. அந்த இயக்குநர் வேறு யாருமில்லை, வீர தீர சூரன் (Veera Dhera Sooran)  மற்றும் சித்தா போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.யு. அருண்குமார்தான் (S.U. Arunkumar ). தற்போது இது குறித்த தகவல் இணையத்தில் வரலாகி வருகிறது.

கமல்ஹாசன் மற்றும் அருண்குமார் கூட்டணி :

நடிகர் கமல்ஹாசன் தக் லைஃப் படத்தை தொடர்ந்து இயக்குநர்கள் அன்பறிவ் இயக்கத்தில் தனது 235வது திரைப்படத்தில் இணைந்துள்ளார். இந்த இடத்தின் ஷூட்டிங்கும் மிக விரைவில் ஆரம்பமாகவுள்ளது. இந்த படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் எஸ். யு அருண்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் இணையவுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த படமானது முழுக்க க்ரைம் திரில்லர் திரைப்படமாக உருவாக்கவுள்ளதாம்.

இந்த படத்தின் கதை கமல்ஹாசனுக்கு மிகவும் பிடித்திருக்கும் நிலையில், இப்படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகளில் இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் மும்முரமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த படத்தைக் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீர தீர சூரன் படக்குழு வெளியிட்ட பதிவு :

கடந்த 2025, மார்ச் மாதத்தில் வெளியான திரைப்படம் வீர தீர சூரன்2. இந்த படத்தில் நடிகர் விக்ரம் முன்னணி நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை துஷாரா விஜயன் நடித்திருந்தார். அதிரடி க்ரைம் திரில்லர் திரைப்படமாக வெளியாகியிருந்த இப்படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையே பெற்றிருந்தது. இப்படத்தில் முக்கிய ரோலில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா நடித்திருந்தார். இந்த படத்தின் வரவேற்பைத் தொடர்ந்துதான், இயக்குநர் எஸ்.யு. அருண் குமார் கமல்ஹாசனின் அடுத்த படத்தை இயக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.