AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரு சவரனுக்கு இவ்வளவா?.. இன்றைய விலை நிலவரம்!!

Gold price in Chennai today: சென்னையில் இன்று 22 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 270 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14,300 ரூபாய்க்கும், சவரனுக்கு 2,160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 1,14,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரு சவரனுக்கு இவ்வளவா?.. இன்றைய விலை நிலவரம்!!
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 19 Mar 2026 10:26 AM IST

சென்னை, மார்ச் 19: இந்த ஆண்டின் தொடக்கத்தில் உச்சத்தில் இருந்த தங்கம் விலை, கடந்த சில நாட்களாக யாரும் எதிர்பாராத அளவுக்கு சரிவை சந்தித்து வருகிறது. அந்தவகையில், இந்த வாரம் முழுவதும் படிப்படியாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. அவ்வாறு இன்றைய தினமும் தமிழகத்தில் தங்கம் விலை குறைந்துள்ளது. போர் உச்சத்தில் இருக்கும் நிலையில், தங்கம் விலை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக நாளுக்கு விலை தலைகீழாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக முதலீட்டாளர்களும், நடுத்தர மக்களும் அளவில்லா மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதோடு, தங்கத்தின் விலை மேலும் குறைய வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக உள்ளது.

இதையும் படிங்க: பெண்களுக்கு அதிக லாபம் தரும் அசத்தல் திட்டங்கள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்:

அதன்படி, சென்னையில் இன்று 22 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 270 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14,300 ரூபாய்க்கும், சவரனுக்கு 2,160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 1,14,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் சரிவை சந்தித்து வருகிறது. அந்தவகையில், வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2.65 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.

தொடர் சரிவில் தங்கம் விலை:

கடந்த 12ம் தேதியில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதை பார்க்க முடிகிறது. அப்படி கடந்த 7 நாட்களில் மட்டும் தங்கம் கிராமுக்கு 800 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது. அதோடு சவரனுக்கு 5,600 ரூபாய் வரை குறைந்துள்ளது. வரும் நாட்களில் தொடர் சரிவை சந்திக்கும் பட்சத்தில் நகைக்கடைகளில் அதிகளவில் மக்கள் கூட்டம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், சமீப நாட்களில் இவ்வளவு சரிவை சந்தித்தது இல்லை.

கடந்த ஒரு வாரத்தில் தங்கம் விலை:

தேதி  ஒரு கிராம்  ஒரு சவரன் 
12 மார்ச் 2026 ரூ.14,970 ரூ.1,19,760
13 மார்ச் 2026 ரூ.14,900 ரூ.1,19,200
14 மார்ச் 2026 ரூ.14,760 ரூ.1,18,080
15 மார்ச் 2026 ரூ.14,760 ரூ.1,18,080
16 மார்ச் 2026 ரூ.14,710 ரூ.1,17,680
17 மார்ச் 2026 ரூ.14,650 ரூ.1,17,200
18 மார்ச் 2026 ரூ.14,570 ரூ.1,16,560
18 மார்ச் 2026 ரூ.14,300 ரூ.1,14,400

இதையும் படிக்க: தங்கம் விலை 30% சரிய வாய்ப்பு.. தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் சலானி கணிப்பு!

டெபாசிட் பக்கம் முதலீட்டாளர்கள்:

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை நீண்ட காலத்திற்கு உயர்த்தி வைக்கத் திட்டமிட்டுள்ளது. முதலீட்டாளர்கள் வட்டி வருமானம் தராத தங்கத்தின் மீது முதலீடு செய்வதை விடுத்து, வங்கி டெபாசிட்கள் மற்றும் கடன் பத்திரங்கள் பக்கம் திரும்புகின்றனர். இது தங்கம் மீதான முதலீட்டு அழுத்தத்தைக் குறைத்துள்ளது.

Follow Us