AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தங்கம் விலை 30% சரிய வாய்ப்பு.. தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் சலானி கணிப்பு!

Gold Price May Drop Up To 30 Percentage | ஈரான் போர் காரணமாக தங்கம் விலை மிக கடுமையான கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், தங்கம் விலை மேலும் 30 சதவீதம் சரிய உள்ளதாக தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் சலானி தெரிவித்துள்ளார்.

தங்கம் விலை 30% சரிய வாய்ப்பு.. தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் சலானி கணிப்பு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 16 Mar 2026 21:56 PM IST

ஈரான் போர் (Iran War) சூழல் காரணமாக தங்கம் விலை (Gold Price) நாளுக்கு நாள் கடும் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. தங்கம் தற்போது அசாதாரன விலை நிலவரத்தை கொண்டுள்ள நிலையில், தங்கம் விலை உயருமா அல்லது குறையுமா என்று பொதுமக்கள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது. இந்த நிலையில், தங்கம் விலை மேலும் 30 சதவீதம் வரை சரிவை சந்திக்கும் வாய்ப்பு உள்ளதாக தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் சலானி தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஈரான் போர் காரணமாக தங்கம் விலையில் ஏற்படும் மாற்றம்

பிப்ரவரி 28, 2026 முதலே ஈரான் மீது இஸ்ரேல் (Israel) மற்றும் அமெரிக்கா (America) தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமான ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக கச்சா எண்ணெய் மீதான முதலீடுகள் அதிகரித்துள்ள நிலையில், தங்கம் விலை கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.

இதையும் படிங்க : ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் அதிரடி பரி மாற்றங்கள்.. முழு விவரம் இதோ!

கடந்த 10 நாட்களுக்கான தங்கம் விலை

தேதி  ஒரு கிராம்  ஒரு சவரன் 
07 மார்ச், 2026 ரூ.15,050 ரூ.1,20,400
08 மார்ச், 2026 ரூ.15,050 ரூ.1,20,400
09 மார்ச், 2026 ரூ.14,950 ரூ.1,19,600
10 மார்ச், 2026 ரூ.15,050 ரூ.1,20,400
11 மார்ச், 2026 ரூ.15,120 ரூ.1,20,960
12 மார்ச், 2026 ரூ.14,970 ரூ.1,19,760
13 மார்ச், 2026 ரூ.14,900 ரூ.1,19,200
14 மார்ச், 2026 ரூ.14,760 ரூ.1,18,080
15 மார்ச், 2026 ரூ.14,760 ரூ.1,18,080
16 மார்ச், 2026 ரூ.14,710 ரூ.1,17,680

இதையும் படிங்க : SIP மற்றும் STP.. எந்த திட்டத்தில் எப்போது, எப்படி முதலீடு செய்ய வேண்டும்?

தங்கம் விலை 30 சதவீதம் சரிவை சந்திக்கும்

இவ்வாறு மார்ச் 11, 2026 முதலே தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், ஈரான் போர் காரணமாக பலரும் கச்சா எண்ணெயில் முதலீடு செய்கின்றனர். இதன் காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு குறைந்துள்ளது. அதன் விளைவாக தங்கம் விலை மேலும் 30 சதவீதம் சரிய வாய்ப்பு உள்ளதாக தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் சலானி தெரிவித்துள்ளார். இந்த தகவல் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us