AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

4வது நாளாக சரிந்த தங்கம் விலை.. தற்போது தங்கம் வாங்குவது சரியானதா?

Is this Right Time To Buy Gold | தங்கம் விலை நாளுக்கு நாள் கடும் சரிவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், தற்போது தங்கம் வாங்குவது சரியான முடிவா, இனி வரும் நாட்களில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

4வது நாளாக சரிந்த தங்கம் விலை.. தற்போது தங்கம் வாங்குவது சரியானதா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 14 Mar 2026 12:27 PM IST

ஈரான் (Iran) போருக்கு மத்தியில் தங்கம் விலை (Gold Price) நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் இன்று (மார்ச் 14, 2026) நான்காவது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது. இதன் காரணமாக ரூ.15,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கம், தற்போது ரூ.15,000-க்கு கீழ் விற்பனையாகிறது. இந்த நிலையில், தற்போதைய சூழலில் தங்கம் வாங்குவது சரியான நடவடிக்கையா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தங்கம் விலை சரிவை சந்திக்க காரணம் என்ன?

ஈரான் மீது அமெரிக்கா (America) மற்றும் இஸ்ரேல் (Israel) தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், புவிசார் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து பண வீக்கம் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ள நிலையில், மறுபுறம் அமெரிக்க டாலரின் வலுவான உயர்வால் தங்கம் விலை சரிவை சந்தித்து வருகிறது. தற்போது தங்கம் விலை குறைந்திருக்கும் சூழலில் தற்போது தங்கம் வாங்குவது சிறந்ததா அல்லது இனி வரும் காலங்களில் மேலும் தங்கம் விலை குறையுமா என்ற குழப்பம் உருவாகியுள்ளது.

இதையும் படிங்க : கேஸ் சிலிண்டர் புக் செய்ய “Smart Booking”.. இண்டேன் கேஸ் அறிமுகம் செய்த புதிய அம்சம்!

தங்கம் விலை சரிவு தற்காலிகமானது – பொருளாதார வல்லுநர்கள்

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் காரணமாக பல்வேறு சிக்கல்கள் உருவாகியுள்ளது. குறிப்பாக ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளதால் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. அதுமட்டுமன்றி சர்வதேச வளைகுடா நாடுகள் மீது தொடர் தாக்குதல் நடத்துவோம் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. இது உலக பொருளாதாரத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

இதையும் படிங்க : கிராமப்புறங்களில் கேஸ் சிலிண்டர் முன்பதிவு காலம் 45 நாட்களாக உயர்வு – மத்திய அரசு நடவடிக்கை

நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்ய தங்கம் சிறந்தது

கச்சா எண்ணெய் உயர்வு காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் அபாயம் உள்ளது. குறிப்பாக இந்தியா உள்ளிட்ட அதிக இறக்குமதி செய்யும் உலக நாடுகளுக்கு இது பெரும் சுமையாக மாறும் ஆபத்து உள்ளது. இந்த காரணிகள் காரணமாக தங்கம் விலை தற்போது சரிவில் இருந்தாலும் நீண்ட கால அடிப்படையில் கடும் விலை உயர்வை அடைய வாய்ப்பு உள்ளது. எனவே நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்ய விரும்பும் நபர்கள் தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்ததாக இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

Follow Us