AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வாட்ஸ்அப், செயலி மூலம் ஈஸியா கேஸ் சிலிண்டர் புக் பண்ணலாம் – எப்படி தெரியுமா?

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு என செய்திகள் வெளியாகி வரும் நிலையில் நாடு முழுவதும் எல்பிஜி சிலிண்டர் புக்கிங் செய்ய அலுவலகங்களின் வாசலில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் வீட்டில் இருந்தபடியே செயலி மற்றும் வாட்ஸ்அப் மூலம் கேஸ் புக் செய்யலாம்.

வாட்ஸ்அப், செயலி மூலம் ஈஸியா கேஸ் சிலிண்டர் புக் பண்ணலாம் – எப்படி தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 13 Mar 2026 21:20 PM IST

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு என செய்திகள் வெளியாகி வரும் நிலையில் நாடு முழுவதும் எல்பிஜி சிலிண்டர் புக்கிங் செய்ய அலுவலகங்களின் வாசலில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதற்காக அவர்கள் பல மணி நேரங்கள் காத்திருக்க வேணடிய நிலை ஏற்படுகிறது. வரும் நாட்களில் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகாக கேஸ் சிலிண்டர் புக் செய்ய குவிந்து வருகின்றனர். ஆனால் எல்பிஜி விநியோக நிறுவனங்கள் வாட்ஸ்அப், மிஸ்டு கால், மொபைல் செயலிகள் மற்றும் இணையதளங்கள் வழியாக கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்யும் வசதியை வழங்கி வருகின்றனர்.

இண்டேன் கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்வது எப்படி?

இண்டேன் கேஸ் வாடிக்கையாளர்கள் பல்வேறு முறைகளில் கேஸ் சிலிண்டர் முன்பதிவ செய்யும் வாய்ப்பை வழங்குகின்றன.

  • வாட்ஸ்அப் மூலம் புக்கிங் செய்ய 7588888824 என்ற இண்டேனின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணை முதலில் உங்கள் போனில் சேமிக்க வேண்டும். பின்னர் வாட்ஸ்அப் மூலம் அந்த நம்பருக்கு REFILL என்று மெசேஜ் அனுப்ப வேண்டும். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து அனுப்பப்பட்டதா என சரிபார்த்த பிறகு சிலிண்டர் புக்கிங் செய்யப்பட்டும்.
  • மேலும் எஸ்எம்எஸ் மிஸ்டு கால் மூலம் சிலிண்டரை முன்பதிவு செய்யலாம்.
  • மேலும் அவசர நேரங்களில் உங்கள் மொபைலில் இருந்து 1906 என்ற எண்ணுக்கு LPG என்று மெசேஜ் அனுப்பி கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யலாம். மேலும் நாம் விருப்பமான நேரங்களில் கேஸ் சிலிண்டர் பெறும் திட்டம் போன்ற சேவைகளையும் வழங்குகிறது.

இதையும் படிக்க : இனி ரூ.20 லட்சம் வரையிலான சொத்து பதிவுக்கு பான் கட்டாயமில்லை.. ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் புதிய விதி!

எச்பி கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்வது எப்படி?

எச்பி கேஸ் வாடிக்கையாளர்களுக்கும் பல்வேறு புக்கிங் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

  • ஐவிஆர்எஸ் மூலம் முன்பதிவு செய்ய மொபைல் எண்ணில் இருந்து 88888 23456 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். மேலும், 94936 02222 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் புக்கிங் செய்யலாம்.
  • வாட்ஸ்அப் எண்ணில் இருந்து 92222 01122 என்ற எண்ணிற்கு Hi என்று மெசேஜ் அனுப்பி புக்கிங் செய்து கொள்ளலாம்.
  • மேலும் எச்பி பே மொபைல் மூலமாகவும், myhpgas.in இணையதளம் மூலமாகவும் கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்யும் வாய்ப்பை ஹெச்பி நிறுவனம் வழங்கியுள்ளது.

இதையும் படிக்க : கிராமப்புறங்களில் கேஸ் சிலிண்டர் முன்பதிவு காலம் 45 நாட்களாக உயர்வு – மத்திய அரசு நடவடிக்கை

பாரத் கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்வது எப்படி?

பாரத் கேஸ் வாடிக்கையாளர்கள் பாரத் கேஸ் மொபைல் ஆப் மூலம் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யலாம். இந்த ஆப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு கிடைக்கிறது. இந்த ஆப்பை போனில் நிறுவிய பிறகு லாகின் செய்யலாமல் சேவைகளை பெறலாம். ஆப்பிற்கு சென்று Activate என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை குறிப்பிட வேண்டும். பிறகு எஸ்எம்எஸ் மூலம் கிடைக்கும் எண்ணை அங்கு பதிவிட வேண்டும். அதன் பிறகு எப்பொழுது வேண்டுமானால் கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்யலாம்.

 

 

Follow Us