AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கேஸ் சிலிண்டர் பற்றாக்குறை: தமிழகத்தில் திருமணங்கள் பாதிக்குமா? – வெளியான தகவல்

Wedding Functions Affected : தமிழ்நாட்டில் நிலவி வரும் வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விநியோகம் தடைபட்டுள்ள நிலையில் ஹோட்டல்களை போல திருமண கேட்டரிங் மற்றும் திருமண மண்டபங்களையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக திருமணங்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. அது குறித்து பார்க்கலாம்.

கேஸ் சிலிண்டர் பற்றாக்குறை: தமிழகத்தில் திருமணங்கள் பாதிக்குமா? – வெளியான தகவல்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 13 Mar 2026 19:31 PM IST

சென்னை, மார்ச் 13 : தமிழ்நாட்டில் நிலவி வரும் வணிக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டர் விநியோகம் தடைபட்டுள்ள நிலையில் ஹோட்டல்களை போல திருமண கேட்டரிங் மற்றும் திருமண மண்டபங்களையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. சென்னையில் பல கேட்டரிங் நிறுவனங்கள் போதுமான எல்பிஜி சிலிண்டர்கள் கிடைக்காமல் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றன. இதனால் முன்பே புக் செய்யப்பட்ட திருமணங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். சென்னையில் திருமண மண்டபங்களில் நடைபெறும் திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு சமையல் செய்ய சிலிண்டர் கிடைக்காமல் விறகுகள் உள்ளிட்ட மாற்று வழிகளை நாடி வருகின்றனர்.

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் முடங்கிய கேட்டரிங் நிறுவனங்கள்

இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் திருமணங்கள் போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்படும் நிலை ஏற்படும் என கூறப்படுகிறது. சென்னையில் உள்ள பெரும்பாலான திருமண மண்டபங்களில் கேஸ் சிலிண்டர்கள் இருப்பு இந்த வாரம் வரை கூட வராது என கூறப்படுகிறது. அதனால் அதற்கு மேல் புக் செய்யப்பட்ட திருமண நிகழ்வுகளுக்கு கேட்டரிங் நிறுவனங்கள் ரத்து செய்யும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : கோடை வெயில் தாக்கம்: பல மாவட்டங்களில் கொளுத்தும் வெயில்

இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது என தெரியால் திருமண மண்டபங்களின் உரிமையாளர்கள் தவித்து வருகின்றனர். மேலும் சென்னையில் உள்ள பெரும்பாலான கேட்டரிங் நிறுவனங்கள் விறகுகளை வைத்த சமையல் செய்யும் அனுபவம் இல்லாதவர்கள் என்று கூறப்படுகிறது. மேலும் பெரும்பாலான திருமண மண்டபங்களில் குழாய்கள் மூலம் எல்பிஜி இணைப்பு வழங்கப்பட்டிருப்பதால் விறகுகளை வைத்து சமையல் செய்வது சாத்தியமில்லை என கூறப்படுகிறது.

சில கேட்டரிங் நிறுவனங்கள் விதவிதமான உணவுகளை நீக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக சைனீஸ், போன்ற உணவுகளை குறைத்து பாரம்பரியமாக வழங்கப்படும் உணவுகளை மட்டுமே வழங்க கேட்டரிங் நிறுவனங்கள் வழங்க முடிவு செய்துள்ளன. இந்த நிலை நீடித்தால் கொரோனா ஊரடங்கு காலகட்டங்களில் நடத்தப்பட்டது போல குறைவான ஆட்களை வைத்து திருமணம் நடத்தப்படும் சூழலும் ஏற்படலாம் என தெரிவிக்கின்றனர்.

இதையும் படிக்க  : வார இறுதி நாளுக்கு சொந்த ஊர் போறீங்களா… இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

விறகுகளுக்கும் தட்டுப்பாடும் ஏற்படும் ஆபத்து

தற்போது வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் நிறுத்தப்பட்டதால் ஹோட்டல்கள் மாற்று வழியாக விறகுகளை வைத்து சமையல் செய்யத் தொடங்கியுள்ளன. இதனால் பெரும்பாலான இடங்களில் விறகுகளில் விலை முன்பைக் காட்டிலும் 2 மடங்கு விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கேட்டரிங் நிறுவனங்களும் விறகுகளை தேர்ந்தெடுத்து வருவதால், இன்னும் சில வாரங்களில் விறகுகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படலாம் என கூறப்படுகிறது. ஈரான் போர் பதற்றம் முடிவுக்கு வந்து மீண்டும் எரிவாயு விநியோகம் சீரானால் மட்டுமே இந்த பிரச்னைகளுக்கு முடிவு எட்டப்படும்.

Follow Us