AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வீட்டில் எத்தனை கேஸ் சிலிண்டர்கள் வைத்திருக்கலாம்? அரசின் விதிகள் என்ன?

LPG Hoarding Rules : மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை பயன்படுத்தி சிலர் கள்ள சந்தைகளில் கேஸ் சிலிண்டர்களை சட்டவிரோதமாக விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு குடும்பத்தில் எத்தனை சிலிண்டர்கள் வைத்திருக்கலாம் என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. அதுகுறித்து பார்க்கலாம்.

வீட்டில் எத்தனை கேஸ் சிலிண்டர்கள் வைத்திருக்கலாம்? அரசின் விதிகள் என்ன?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 13 Mar 2026 17:38 PM IST

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையே போர் பதற்றம் காரணமாக இந்தியாவிற்கு எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ளது. இதனால் எல்பிஜி சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது வீடுகளுக்கு வழங்கப்படும் எல்பிஜி சிலிண்டர்கள் தடையின்றி கிடைக்க, வணிக சிலிண்டர்கள் விநியோகத்துக்கு தடை விதித்துள்ளது. இதனால் ஹோட்டல்களில் சிலிண்டர்கள் கிடைக்காமல் விறகுகள் உள்ளிட்ட மாற்று வழிகளை நாடி வருகின்றன. இந்த நிலையில் வீடுகளுக்கு வழங்கப்படும் சிலிண்டர்களும் நிறுத்தப்படுமா என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. இந்த நிலையில் போதிய சிலிண்டர்கள் கையில் இருப்பதாகவும் மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

இந்த நிலையில் மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை பயன்படுத்தி சிலர் கள்ள சந்தைகளில் கேஸ் சிலிண்டர்களை சட்டவிரோதமாக விநியோகம் செய்து வருகின்றனர். அப்படி செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அச்சம் காரணமாக, ஆங்காங்கே சிலிண்டர்களை பதுக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஒரு குடும்பத்தில் எத்தனை சிலிண்டர்கள் வைத்திருக்கலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதையும் படிக்க : கிராமப்புறங்களில் கேஸ் சிலிண்டர் முன்பதிவு காலம் 45 நாட்களாக உயர்வு – மத்திய அரசு நடவடிக்கை

ஒரே நேரத்தில் எத்தனை சிலிண்டர்களை வீட்டில் வைத்திருக்கலாம்?

தற்போதுள்ள விதிகளின்படி, இந்தியாவில் ஒரு குடும்பம் ஒரு நிதியாண்டில் 14.2 கிலோ எடையுடைய 12 எல்பிஜி சிலிண்டர்கள் வரை மானிய விலையில் பெற முடியும். மத்திய அரசு வழங்கும் மானிய திட்டங்களின் கீழ் இந்த சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன. அதே போல சிறிய 5 கிலோ அளவிலான எல்பிஜ சிலிண்டர்கள் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு வருடத்திற்கு 34 சிலிண்டர்கள் வரை மானிய விலையில் பெறும் உரிமை உள்ளது.

இதையும் படிக்க : UAN இல்லாமே பிஎஃப் பேலன்ஸ் செக் செய்ய முடியும்.. எப்படி தெரியுமா?

பொதுவாக, மானிய சிலிண்டர் விதிகளின் படி ஒரு மாதத்தில் ஒரு சிலிண்டர் மட்டும் முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. மானிய விலையில் 12 சிலிண்டர்கள் வாங்க முடியு் என்றாலும், ஒரு குடும்பம் வருடத்திற்கு மொத்தம் 15 எல்பிஜி சிலிண்டர்கள் வரை வாங்க முடியும்.  அதாவது 12 மானிய சிலிண்டர்களைத் தவிர்த்து, கூடுதலாக 3 சிலிண்டர்கள் சந்தை விலையில் வாங்க அனுமதி உள்ளது. மேலும் சிலிண்டர்களை பதுக்குவது மற்றும் பிளாக் மார்க்கெட்டில் விற்பது போன்ற செயல்களை தடுக்க, சிலிண்டர் முன்பதிவு செய்ய 25 நாட்கள் இடைவேளை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன் படி ஒருவர் ஒரு வீட்டில் அதிகபட்சம் ஒரு எல்பிஜி சிலிண்டர்கள் மட்டுமே வீட்டில் வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக சிலிண்டர் வைத்திருப்பவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க முடியும்.

Follow Us