ATM-ல் பணம் எடுக்கும்போது கைக்கு பண வரமால் Debit ஆகிவிட்டதா?.. கவலை வேண்டாம்!
ATM Cash Not Dispensed? | பலரும் பண தேவை ஏற்படும்போது ஏடிஎம் மூலம் பணம் எடுத்து செலவு செய்கின்றர். இந்த நிலையில், ஏடிஎம்-ல் பணம் எடுக்க முயற்சி செய்யும்போது பணம் கைக்கு வராமல் கணக்கில் இருக்கு மட்டும் டெபிட் ஆனால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தற்போதைய காலக்கட்டத்தில் கையில் பணத்தை வைத்து செலவு செய்யும் பழக்கம் பெரும்பாலான பொதுமக்களுக்கு இல்லை. பலரும் தங்களது ஸ்மார்ட்போன்களில் உள்ள யுபிஐ (UPI – Unified Payment Interface) செயலிகள் மூலமே பண பரிவர்த்தனைகளை (Money Transaction) மேற்கொள்கின்றனர். ஒருவேளை பணத்தின் தேவை ஏற்பட்டாலும் கூட வங்கிக்கு சென்றுதான் எடுக்க முடியும் என்ற நிலை இல்லை. தங்களது வீட்டின் அருகே உள்ள ஏடிஎம் (ATM – Automated Teller Machine) மையங்கள் மூலமே பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
அவ்வாறு, ஏடிஎம் செயலியில் இருந்து பணத்தை எடுக்கும்போது பலரும் சந்திக்கும் முக்கிய சிக்கல் ஒன்று உள்ளது. அதுதான் பணம் எடுக்கப்பட்டுவிட்டது என மெசேஜ் வந்தும், கைக்கு பணம் வராமல் இருப்பது. இந்த நிலையில், இத்தகைய சூழலில் என்ன செய்ய வேண்டும், பணம் திரும்ப கிடைத்துவிடுமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கைக்கு பணம் வராமல் சிக்கிக்கொள்ளும் சிக்கல்
ஏடிஎம்-ல் பணம் எடுக்க வேண்டும் என்றால், ஏடிஎம் கார்டை உள்ளிட்டு பாஸ்வேர்டு மற்றும் எவ்வளவு தொகை எடுக்கப்போகிறீர்களோ அதனை உள்ளிட வேண்டும். அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் நொடி பொழுதில் வங்கி கணக்கிற்கு பணம் வந்துவிடும். ஆனால், சில சமயங்களில் கைக்கு பணம் வராது. ஆனால், மொபைல் எண்ணுக்கு உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது என குறுஞ்செய்தி வரும். பொதுமக்கள் மிகவும் அரிதாக இந்த சிக்கலை எதிர்க்கொள்கின்றனர்.




இதையும் படிங்க : இனி 4 நாமினிகள் வரை நியமிக்கலாம்.. ஆர்பிஐ எடுத்த முக்கிய முடிவு!
கைக்கு பணம் வரவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?
ஒருவேளை நீங்கள் ஏடிஎம்-ல் பணம் எடுக்கும்போது கைக்கு பணம் வராமல், மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி மட்டும் வந்தால் கவலைப்பட தேவையில்லை. உங்களது பணம் உங்களுக்கு நிச்சயமாக திரும்ப கிடைக்கும். அவ்வாறு ஏடிஎம்-ல் சிக்கொண்ட பணத்தை திரும்ப பெற சட்டப்பூர்வமான வழிமுறைகள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை கடைபிடித்தாலே போதுமானதாகும்.
இதையும் படிங்க : திடீரென விலை உயரும் தங்கம்.. காரணம் என்ன?.. பின்னணியில் அமெரிக்க டாலர்?
வங்கியில் புகார் செய்யலாம்
ஏடிஎம்-ல் பணம் எடுக்கும்போது உங்களுக்கு கையில் பணம் வரவில்லை என்றால் கவலை வேண்டாம். நீங்கள் அது குறித்து உரிய வங்கியிடம் புகார் அளிக்கலாம். அதற்கு நீங்கள் பணம் எடுப்பதற்கு முயற்சி செய்ததற்கு ஆதாரமாக ஏடிஎம் ஸ்லிப், பணம் டெபிட் செய்யப்பட்டது என உங்களுக்கு வந்த குறுஞ்செய்தி ஆகியவற்றை நீங்கள் வங்கியில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முடக்கம் செய்யப்பட்ட உங்களது பணம் மீண்டும் உங்களிடம் வந்து சேர்ந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.