AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் அதிரடி பரி மாற்றங்கள்.. முழு விவரம் இதோ!

Major 7 Tax Changes From April 1 | 2026, ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய நிதியாண்டு தொடங்க உள்ளது. இந்த நிதியாண்டு முதல் பல்வேறு மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளது. அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் அதிரடி பரி மாற்றங்கள்.. முழு விவரம் இதோ!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 14 Mar 2026 18:57 PM IST

இந்தியாவில் ஏப்ரல் மாதம் முதல் மார்ச் மாதம் வரை ஒரு நிதியாண்டு கணக்கிடப்படுகிறது. வங்கிகள் இந்த நிதியாண்டை மையப்படுத்தியே செயல்படுகின்றன. தற்போது மார்ச் மாதம் நடந்துக்கொண்டு இருக்கும் நிலையில், விரைவில் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. அதாவது 2026 – 2027 நிதி ஆண்டு தொடங்க உள்ளது. இந்த நிலையில், புதி நிதியாண்டில் மத்திய அரசு சில முக்கிய வரி மாற்றங்களை மேற்கொள்ள உள்ளது. அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

புதிய நிதியாண்டில் வரும் முக்கிய மாற்றங்கள்

பொதுமக்களின் வருமானம், முதலீடு, வரி சேமிப்பு மற்றும் சேமிப்பு கணக்குகள் என அனைத்திலும் இந்த நிதியாண்டில் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளது. இந்த மாற்றங்களின் மூலம் பொதுமக்கள் தங்களது கையில் இருக்கும் பணத்தை கூடுதலாக சேமிக்க முடியுமா அல்லது இழக்க நேரிடுமா என்பது குறித்து பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. அதற்கு இந்த 7 முக்கிய வரி மாற்றங்கள் குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியது கட்டாயமாக உள்ளது.

இதையும் படிங்க : வாட்ஸ்அப், செயலி மூலம் ஈஸியா கேஸ் சிலிண்டர் புக் பண்ணலாம் – எப்படி தெரியுமா?

1. புதிய வருமான வரி சட்டம்

ஏற்கனவே அமலில் உள்ள 1961 ஆம் ஆண்டின் வருமான வரி சட்டத்திற்கு பதிலாக, புதிய வருமான வரி சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த சட்டம் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வர உள்ளது.

2. வருமான வரி தாக்கல் காலக்கெடு

வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவில் முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, ஐடிஆர்-3 மற்றும் ஐடிஆர்-4 தாக்கல் செய்யும் நபர்களுக்கான காலக்கெடு ஜூலை 31 ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 31 ஆம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

3. திருத்தப்பட்ட வருமான வரி தாக்கல்

ஏற்கனவே தாக்கல் செய்த கணக்கு தாக்கலில் திருத்தங்கள் செய்ய விரும்பினால், அதற்கான காலக்கெடு விரிவுபடுத்தப்பட உள்ளது. அதாவது இந்த புதிய காலக்கெடு டிசம்பர் 31 ஆம் தேதியில் இருந்து மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், டிசம்பர் 31 ஆம் தேதிக்கு பிறகு திருத்தப்பட்ட வருமான வரி தாக்கல் செய்யும் நபர் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

இதையும் படிங்க : வீட்டில் எத்தனை கேஸ் சிலிண்டர்கள் வைத்திருக்கலாம்? அரசின் விதிகள் என்ன?

4. டிசிஎஸ்

பெரும்பலான பொருட்களுக்கு 2 சதவீதம் என்ற சீரான விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது மதுபான விற்பனைக்கு 1 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக அதிகரித்துள்ளது. பீடி சுற்ற பயன்படுத்தப்படும் டெண்டு இலைகளுக்கு 5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஸ்கிராப் விற்பனைக்கு 1 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாகவும், கனிமங்களுக்கு 1 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

5. எஸ்டிடி அதிகரிப்பு

பியூச்சர் வர்த்தகத்திற்கு எஸ்டிடி 0.02 சதவீதத்தில் இருந்து 0.05 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆப்ஷன் பிரீமியம் 0.1 சதவீதத்தில் இருந்து 0.15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆப்ஷன் எக்சர்சைஸ் 0.125 சதவீதத்தில் இருந்து 0.15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

6. பங்குகள் திரும்ப பெறுதல் வரி மாற்றம்

ஏப்ரல் 1, 2026 முதல் இது மூலதன ஆதாய வரியாக மாற்றப்பட உள்ளது. அதாவது பங்குகளை திரும்ப பெறும்  விலையில், நீங்கள் வாங்கிய விலையை கழித்த பிறகு கிடைக்கும் லாபத்திற்கு மட்டுமே வரி விதிக்கப்படும். இது சிறு முதலீட்டாளர்களுக்கு பெரிய அளவிலான நிவாரணத்தை அளிக்கும். இதன் மூலம் இனி லாபத்திற்கு மட்டுமே என்பதால் வரி சுமை குறையும்.

இதையும் படிங்க : வீட்டில் எத்தனை கேஸ் சிலிண்டர்கள் வைத்திருக்கலாம்? அரசின் விதிகள் என்ன?

7. டிவிடெண்ட் மீதான வட்டி செலவு கழிக்கப்படாது

முன்பு பங்குகள் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் மூலம் டிவிடெண்ட் பெறுவதற்கு நீங்கள் ஏதேனும் கடன் பெற்று, அதற்கு வட்டி செலுத்தியிருந்தால் அந்த வட்டி செலவை டிவிடெண்டில் இருந்து கழித்துக்கொள்ள அனுமதி இருந்தது. அனால் ஏப்ரல் 1, 2026 முதல் இந்த சலுகை நீக்கம் செய்யப்பட உள்ளது.

Follow Us