அதிமுகவினரை திமுகவில் இணைப்பதற்கு திடீர் தடை… பாஜகவை மனதில் வைத்து தலைமை உத்தரவு? முழு விவரம் என்ன!
AIADMK And DMK: அதிமுகவைச் சேர்ந்தவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைவதற்கு அந்தக் கட்சியின் தலைமை திடீர் தடை விதித்துள்ளது. இதனால், அதிமுகவில் இருந்து விலகும் எண்ணத்தில் இருந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கான காரணம் என்ன என்பதை இந்தப்பதிவில் பார்க்கலாம்.
தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் பல்வேறு அதிர்ச்சிகரமான அரசியல் நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கமாகும். அந்த வகையில், யாருமே நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டு, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தை தொடங்கி நடத்தி வந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பாக பார்க்கப்பட்டது. இதே போல, அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், நிலோபர் கபில், முன்னாள் எம்பிக்கள் மைத்ரேயன், அன்வர் ராஜா, முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர். மேலும், அதிமுகவினர் பலர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைவதற்கு தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுகவினர் திமுகவில் இணைவதற்கு திடீர் தடை
இதேபோல, அதிமுகவில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள், மீண்டும் கட்சியில் இணைய முடியாதவர்கள் என பலர், திமுகவில் இணைவதற்காக அக்கட்சியின் தலைமையிடம் விண்ணப்பம் அளித்து காத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அதிமுகவை சேர்ந்தவர்கள் திமுகவில் இணைவதற்கு அக்கட்சியின் தலைமை திடீர் தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக, அக்கட்சியை சேர்ந்த நபர்களிடம் விசாரிக்கையில், தமிழகத்தில் பிரதான கட்சியாக விளங்கி வரும் அதிமுகவை பலம் இழக்க செய்யும் வகையில், அக்கட்சியினரை திமுகவில் இணைத்தால், அதிமுக பலம் இழந்து, பாஜக வலிமை பெற்று விடும் என்று எண்ணுகின்றனர்.
மேலும் படிக்க: சட்டமன்ற தேர்தல் 2026: திரள் நிதி மூலம் உதவ வேண்டும் – சீமான் வெளியிட்ட வீடியோ




மாவட்ட செயலாளர்கள் கூறிய கருத்துக்களின்படி
இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மாவட்ட செயலாளர்கள் தெரிவித்த கருத்துக்களை அடிப்படையில் இந்த தகவல் திமுக தலைமைக்கு சென்ற நிலையில், திமுகவில், அதிமுகவில் சேர்ந்தவர்களை இணைப்பதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்தது. இதன் காரணமாக அதிமுகவில் இருந்து ஏற்கனவே வெளியேறியவர்கள், வெளியேற திட்டமிட்டுள்ளவர்கள், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் என அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பாஜக வலிமை பெற்று விடக்கூடாது என்பதற்காக
ஏற்கனவே அதிமுகவில் முக்கிய புள்ளியாக செயல்பட்டு வந்த ஓ. பன்னீர்செல்வம் மற்றும் சிலர் அக்கட்சியில் இருந்து அடுத்தடுத்து வெளியேறி திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இது அதிமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. மேலும், அந்த கட்சியானது வலிமை இழந்து வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டது. இதனால், திமுக வலிமை பெற்று வருவதாகவும், கூட்டணியிலும் அதிகளவு கட்சிகள் இருப்பதால் பலம் வாய்ந்த கட்சியாக திமுக கூட்டணி இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டிருந்தன. இந்த நிலையில், அதிமுகவில் இருந்து திமுகவில் இணைவதற்கு அக்கட்சியின் தலைமை திடீர் தடை விதித்துள்ளது பேசும் பொருளாகி உள்ளது.
மேலும் படிக்க: சென்னையில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு.. வெயில் இருக்குமா? இன்றைய வானிலை நிலவரம்..