AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பெண்கள் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்ய திட்டம்… திமுகவின் மாஸ்டர் பிளான்!

DMK 25 Women Candidates : தமிழகத்தில் பெண்களின் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்தவற்காக திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு வியூகத்ததை கட்டமைத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், 25 பெண் வேட்பாளர்களை தேர்தலில் களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பெண்கள் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்ய திட்டம்… திமுகவின் மாஸ்டர் பிளான்!
திமுகவில் 25 பெண் வேட்பாளர்கள் களமிறக்க திட்டம்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 19 Mar 2026 07:11 AM IST

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றியை மையமாக வைத்து அரசியல் கட்சிகள் தங்களுக்கான அரசியல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதில், கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்பாளர்கள் அறிவிப்பு ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், வாக்காளர்களை கவரும் வகையில், என்னென்ன அறிவிப்புகளை வெளியிடலாம் என்பன உள்ளிட்ட தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, பொது மக்களிடம் கருத்துக்களை கேட்டு அதன் அடிப்படையில் தேர்தல் வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் தயார் செய்து வருகின்றன. இதில், தமிழகத்தில் அதிகமாக உள்ள பெண்களின் வாக்குகளை கவருவதற்கு பல்வேறு திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை அரசியல் கட்சிகள் தயார் செய்து வருகின்றன. அந்த வகையில், திராவிட முன்னேற்ற கழகம் ஒரு வியூகத்தை கையில் எடுத்துள்ளது.

25 பெண் வேட்பாளர்களை களமிறக்கும் திமுக

அதன்படி, சட்டமன்ற தேர்தலில் பெண்களின் வாக்குகளை குறி வைத்து சென்னை மாவட்டத்தில் 2 பேர் உள்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 25 பெண் வேட்பாளர்களை களம் இறக்க திமுக முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக திமுகவில் அமைப்பு ரீதியாக செயல்படும் 3 மாவட்டங்களுக்கு 1 மகளிர் வீதம் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் 12 பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டு போட்டியிட்டனர். அதில், 6 பெண் வேட்பாளர்கள் மட்டுமே வெற்றியை பதிவு செய்தனர்.

மேலும் படிக்க: நெருங்கும் சட்டமன்ற தேர்தல்.. தமிழகத்தில் ரூ. 42.65 கோடி பறிமுதல்..

பெண்கள் வாக்குகளை அறுவடை செய்யும் பணி

இதில், கயல்விழி மற்றும் கீதா ஜீவன் ஆகிய இருவர் மட்டுமே அமைச்சர்களாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில், வருகிற சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின்னர், பெண்களுக்கான இலவச பேருந்து பயணம், 1.31 கோடி பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ஆகிய திட்டங்களின் மூலம் பெண்களின் வாக்குகளை மொத்தமாக தன் வசப்படுத்தும் பணியில் திமுக தலைமை ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக, தேர்தல் வியூக நிறுவனங்களுடன் திமுக தலைமை ஆலோசனை மேற்கொண்டது.

30 பெண்களை வேட்பாளர்களாக களமிறக்க ஐடியா

அதில், பெண்களுக்கு வழங்கப்படும் மகளிர் திட்டங்கள் மூலம் மகளிர் வாக்குகள் அனைத்தும் தங்கள் கட்சிக்கு கிடைக்குமா என்பது குறித்தும், அதற்காக என்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை கேட்டுள்ளது. அப்போது, தமிழகத்தில் இலவச பேருந்து பயணத் திட்டத்திற்கு மட்டுமே பெண்களிடம் பெருவாரியான வரவேற்பு உள்ளது. அத்துடன், 30 பெண்களை வேட்பாளராக களம் இறக்க வேண்டும் என்று அந்த நிறுவனம் ஆலோசனை கூறியதாக தெரிகிறது. அதன் அடிப்படையிலேயே, திமுகவில் அமைப்பு ரீதியாக செயல்படும் 77 மாவட்டங்களில் 3 மாவட்டங்களுக்கு 1 பெண் வீதம் குறைந்தபட்சம் 25 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து பெண்களை தேர்வு செய்து வேட்பாளராக களம் இறக்க திமுக தலைமை முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

மேலும் படிக்க: சட்டமன்ற தேர்தல் 2026: திரள் நிதி மூலம் உதவ வேண்டும் – சீமான் வெளியிட்ட வீடியோ

Follow Us