அதிமுக – பாஜக தொகுதி பங்கீடு.. நாளை தமிழகம் வரும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
இந்த முறை அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற்று, தமிழகத்தில் வலுவாக காலூன்ற வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், அதிமுக கூட்டணியில் பாஜக கிட்டத்தட்ட 35 இடங்களை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் சென்னையில் முக்கிய தொகுதிகளான டி.நகர், ஆயிரம் விளக்கு, துறைமுகம், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளையும் கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மார்ச் 18, 2026: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிய நிலையில் அரசியல் களம் பரபரப்பாக தொடங்கியுள்ளது. குறிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, மார்ச் 19, 2026 ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் கோயில் தமிழகத்திற்கு வருகை தர உள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலை எடுத்துக் கொண்டால், நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் ஆகியவை இதில் முக்கிய கட்சிகளாக உள்ளன.
தேசிய ஜனநாயக கூட்டணியைப் பொருத்தவரை அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன.
சென்னையில் அதிக இடங்களை குறிவைக்கும் பாஜக:
பாஜகவை பொருத்தவரையில், கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 21 இடங்கள் வழங்கப்பட்டன. அதில் நான்கு இடங்களில் வெற்றி பெற்று, 15 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர்கள் நுழைந்தனர்.
மேலும் படிக்க: இனி வெளுக்க போகும் மழை..எந்தெந்த ஊர்களில் தெரியுமா?
இந்த முறை அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற்று, தமிழகத்தில் வலுவாக காலூன்ற வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், அதிமுக கூட்டணியில் பாஜக கிட்டத்தட்ட 35 இடங்களை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் சென்னையில் முக்கிய தொகுதிகளான டி.நகர், ஆயிரம் விளக்கு, துறைமுகம், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளையும் கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இழுபறியில் தொகுதி பங்கீடு:
ஆனால், அதிமுக தரப்பில் இந்த தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுமா என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது. ஏற்கனவே கடந்த இரண்டு முறை திருச்சி மற்றும் மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. அந்த பொதுக்கூட்டங்களைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் முக்கிய நிர்வாகிகள் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் எந்த ஒரு சமரச முடிவும் எட்டப்படவில்லை.
மேலும் படிக்க: தோல்வியை கண்டிராத தொடர் வெற்றியாளர் சக்கரபாணி… ஒட்டன்சத்திரம் தொகுதியில் 7- ஆவது முறை வெற்றியை பதிவு செய்வாரா!
இதனைத் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக வெற்றி கழகம் இணைய வாய்ப்பு உள்ளது என்ற பல்வேறு யூகங்கள் வெளியானது. ஆனால் தமிழக வெற்றி கழகம் தரப்பில் “தனித்தே போட்டியிடுவோம்” என்று தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை தமிழகம் வரும் பியூஷ் கோயல்:
நேற்று பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விரைவில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்கான குழு அமைக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டார்.
இந்த சூழலில், தமிழக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். நாளை அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தொகுதி பங்கீடு குறித்த ஒரு சமரச முடிவு எட்டப்பட்டு இறுதி செய்யப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.