AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நெருங்கும் சட்டமன்ற தேர்தல்.. தமிழகத்தில் ரூ. 42.65 கோடி பறிமுதல்..

சட்டவிரோத பணப்புழக்கம், வாக்காளர்களை கவரும் நோக்கில் வழங்கப்படும் இலவசப் பொருட்கள், மற்றும் தேர்தல் விதிமுறைகளுக்கு எதிராக விநியோகிக்கப்படும் பொருட்களை தடுக்க அதிகாரிகள் பல்வேறு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன.

நெருங்கும் சட்டமன்ற தேர்தல்.. தமிழகத்தில் ரூ. 42.65 கோடி பறிமுதல்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 18 Mar 2026 18:16 PM IST

மார்ச் 18, 2026:  தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 முன்னிட்டு, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் அனைவருக்கும் சமமான சூழலை உருவாக்கும் நோக்கில் தேர்தல் செலவுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்படுகின்றன.  தற்போது நடைபெற்று வரும் தேர்தல் செலவினக் கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பல்வேறு பிரிவுகளின் கீழ் அதிகாரிகள் கணிசமான அளவு பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். 18 மார்ச் 2026 அன்று நிலவரப்படி, பறிமுதல் செய்யப்பட்ட மொத்த பொருட்களின் மதிப்பு ரூபய் 42.65 கோடியாக உள்ளது.

42.65 கோடி ரூபாய் பறிமுதல்:

இதன் விவரங்கள் பின்வருமாறு:

• ரொக்கம்: ₹2.37 கோடி
• மதுபானம்: ₹0.18 கோடி
• போதைப்பொருட்கள்: ₹2.88 கோடி
• விலையுயர்ந்த உலோகங்கள்: ₹16.42 கோடி
• இலவசங்கள் மற்றும் பிற பொருட்கள்: ₹20.80 கோடி

தேர்தல் காலத்தில் சட்டவிரோதமாக பணம் மற்றும் பொருட்கள் பரிமாறப்படுவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தேர்தல் செலவினக் கண்காணிப்பு குழுக்கள் மற்றும் அமலாக்க முகமைகள் இணைந்து மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.

தீவிர சோதனையில் பறக்கும் படை:

குறிப்பாக, சட்டவிரோத பணப்புழக்கம், வாக்காளர்களை கவரும் நோக்கில் வழங்கப்படும் இலவசப் பொருட்கள், மற்றும் தேர்தல் விதிமுறைகளுக்கு எதிராக விநியோகிக்கப்படும் பொருட்களை தடுக்க அதிகாரிகள் பல்வேறு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன.

மேலும், வருமான வரித்துறை, காவல்துறை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு, மற்றும் பிற அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தேர்தல் நேரத்தில் நடைபெறக்கூடிய சட்டவிரோத செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் படிக்க:  ஆட்டோவுக்கான எரிவாயுவை வீட்டு சிலிண்டர்களில் நிரப்பும் மக்கள் – என்ன நடக்கும் தெரியுமா?

வாக்காளர்களை பணம் அல்லது பொருட்களால் கவரும் முயற்சிகளை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் தேர்தல் விதிமுறைகளை மீறும் செயல்பாடுகளை கவனித்தால் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் அளிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தல் செயல்முறை முழுவதும் வெளிப்படைத்தன்மை மற்றும் சட்ட ஒழுங்கு நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பை வலுப்படுத்தி வருகின்றனர்.

Follow Us