AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆட்டோவுக்கான எரிவாயுவை வீட்டு சிலிண்டர்களில் நிரப்பும் மக்கள் – என்ன நடக்கும் தெரியுமா?

Cylinder Shortage Crisis : ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், திருவண்ணாமலையில் ஆட்டோக்களுக்கு நிர்ப்பும் சிஎன்ஜி எரிவாயுவை, வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரில் நிரப்பி வருகின்றனர். இது கடும் ஆபத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆட்டோவுக்கான எரிவாயுவை வீட்டு சிலிண்டர்களில் நிரப்பும் மக்கள் – என்ன நடக்கும் தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 18 Mar 2026 18:08 PM IST

திருவண்ணாமலை, மார்ச் 18 : ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் அச்சம் காரணமாக கேஸ் சிலிண்டருக்கு அதிக அளவில் முன்பதிவு செய்து வருகின்றனர். இதன் காரணமக சிலிண்டர் விலை கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.60 வரை விலை உயர்ந்தது. வணிக சிலிண்டர்களின் விநியோகம் நிறுத்தப்பட்டதால் தமிழ்நாட்டில் ஹோட்டல்கள் செயல்பட முடியாமல் திணறி வருகின்றன. இந்த நிலையில் திருவண்ணாமலையில் சில தனியார் நிறுவனங்கள் எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறையை பயன்படுத்திக்கொண்டு பாதுகாப்பு விதிகளை மீறி சட்ட விரோதமாக சிலிண்டர்களை நிரப்பி விற்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.

ஆட்டோக்களுக்கான எரிவாயுவை வீட்டு சிலிண்டர்களில் நிரப்பும் மக்கள்

திருவண்ணாமலையில் பல எரிவாயு முகவர்கள் ஸ்டாக் இல்லை என்று தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் திருவண்ணாமலையில் கிரிவல பாதைகளில் உள்ள நூற்றுக்கணக்கான ஹோட்டல்கள் மற்றும் சிறிய உணவகங்கள், சாலையோர கடைகள் மூடப்பட்டு வருகின்றன. இதனால் திருவண்ணாமலை கோவிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க : பூத் ஸ்லிப்பில் புதிய மாற்றம் – வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? – தேர்தல் ஆணையம் விளக்கம்

இதனால் மக்கள் மாற்று வழிகளை தேடும் நிலைக்கு உணவக உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கிரிவலம் பாதையில் உள்ள தனியார் எரிவாயு நிரப்பும் நிலையத்தில் ஆபத்தான முறையில் சட்டவிரோதமாக எரிபொருள் நிரப்பப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், கிரிவல பாதையில் ஆட்டோவிற்கு நிரப்பப்படும் சிஎன்ஜி எரிவாயுவை, வீட்டு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்களில் நிரப்பப்படுவதாக கூறப்படுகிறது.

என்ன நடக்கும் தெரியுமா?

இதில் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளன. பொதுமக்கள் அந்த எரிவாயு நிலையத்தில் வந்து சிலிண்டரில் எரிவாயு நிரப்புவது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அங்கு ஒரு வீட்டு சிலிண்டர் ஒன்றுக்கு எரிவாயு நிரப்ப ரூ.2,000 மற்றும் கமர்ஷியல் சிலிண்டருக்கு ரூ.3500க்கும் மேல் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. பொதுவாக காலியாக உள்ள சிலிண்டர்களில் சிறிதளவு எரிவாயு இருக்கும். அதனோடு வேறுவகை எரிவாயு நிரப்புவது மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இதையும் படிக்க :  R. Sakkarapani Tamil Nadu Election: தோல்வியை கண்டிராத தொடர் வெற்றியாளர் சக்கரபாணி… ஒட்டன்சத்திரம் தொகுதியில் 7- ஆவது முறை வெற்றியை பதிவு செய்வாரா!

மேலும் வீட்டு மற்றும் வணிக சிலிண்டர்களில் பயன்படுத்தப்படும் எல்பிஜி எரிவாயு அடர்த்தி மற்றும் அழுத்தம் ஆட்டோக்களில் பயன்படுத்தப்படும் சிஎன்ஜி எரிவாயுவின் தன்மையில் இருந்து முற்றிலும் வேறுபடும். இதந்த இரண்டையும் கலப்பது அழுத்தத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி, சிலிண்டர் வெடிக்கும் அபாயத்த அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கின்றனர்.

Follow Us