AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பூத் ஸ்லிப்பில் புதிய மாற்றம் – வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? – தேர்தல் ஆணையம் விளக்கம்

EC Changes Booth Slip : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள நிலையில், பூத் ஸ்லிப் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பாக பூத் ஸ்லிப்பில் வாக்காளர் புகைப்படம் இடம் பெறாது என்று தெளிவுபடுத்தியுள்ளது.

பூத் ஸ்லிப்பில் புதிய மாற்றம் – வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? – தேர்தல் ஆணையம் விளக்கம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 18 Mar 2026 14:47 PM IST

சென்னை, மார்ச் 18 : தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23, 2026 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கை வருகிற மே 4, 2026 அன்று நடைபெறவுள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தமிழ்நாடு முழுவதும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும், ரூ.50,000க்கு மேல் கொண்டு செல்லப்படும் பணத்துக்கு உரிய ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பூத் ஸ்லிப் தொடர்பாக முக்கிய மாற்றத்தை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பூத் ஸ்லிப்பில் புதிய மாற்றம்

இதுவரை வழங்கப்பட்ட பூத் ஸ்லிப்பில் வாக்காளரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில் இந்த முறை வழங்கப்படும் பூத் ஸ்லிப்பில் புகைப்படம் இடம்பெறாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. புதிய நடைமுறையின் படி, வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பூத் ஸ்லிப்பில், வாக்காளரின் பெயர் வாக்குசாவடியின் பெயர், வாக்குப்பதிவு தேதி மற்றும் நேரம் போன்ற தகவல்கள் இடம் பெறும். மேலும் இந்த பூத் ஸ்லிப் வாக்குப்பதிவுக்கு 5 நாட்களுக்கு முன்பாக மாவட்ட தேர்தல் அலுவலர்களால் வழங்கப்படும்.

இதையும் படிக்க : பாய்ந்து வந்த காரில் ரூ.14 கோடி தங்க நகைகள்.. உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல்.. பறக்கு படை விசாரணை!

வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

மேலும் இந்த பூத் ஸ்லிப்பை மட்டும் வைத்து வாக்களிக்க முடியாது. காரணம், அது அடையாள ஆவணமாக ஏற்க முடியாது. வாக்காளர்கள் வாக்காள அடையாள அட்டையை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். ஒரு வேளை உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றால் அதற்கு பதிலாக,

  • ஆதார் கார்டு
  • தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அடையாள அட்டை.
  • புகைப்படத்துடன் கூடி வங்கி/ அஞ்சலக கணக்கு புத்தகம்,
  • தொழிலாளர் நல அமைச்சகத்தின் சார்பில் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீடு அட்டை ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டம்
  • ஓட்டுநர் உரிமம்
  • பான் கார்டு
  • தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்தி தலைமை பதவாளரால் வழங்கப்பட்ட திறனட்டை.
  • இந்தி கடவு சீட்டு
  • புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதி ஆவணம்.
  • மத்திய/மாநில அரசுகள் பொதுத்துறை நிறுவனங்கள் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடி பணி அடையாள அட்டை
  • இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் இயலாமைக்கான தனித்துவமான அடையாள அட்டைகளை காண்பிக்க வேண்டும்.

இதையும் படிக்க : வாக்குப்பதிவு நாளில் ஒரு நற்செய்தி… விடுமுறையும் உண்டு.. ஊதியமும் உண்டு… தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

மேல் சொன்ன ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்பித்து வாக்களிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 

Follow Us