AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

TN Election: சென்னை: தேர்தலை புறக்கணிக்கும் துரைப்பாக்கம் மக்கள்.. காரணம் இதுதான்!

Chennai Thoraipakkam Residents: சென்னை துரைப்பாக்கம் பகுதியில் வீட்டு உரிமை பிரச்சினை மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தியடைந்த மக்கள், “ஓட்டு கேட்க யாரும் வர வேண்டாம்” என அறிவித்து தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இது தேர்தல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TN Election: சென்னை: தேர்தலை புறக்கணிக்கும்  துரைப்பாக்கம் மக்கள்.. காரணம் இதுதான்!
துரைப்பாக்கம்
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 18 Mar 2026 12:30 PM IST
  1. சென்னை துரைப்பாக்கம் பகுதியில் மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். 35 ஆண்டுகளாக வசித்து வந்த வீடுகளை காலி செய்ய அழுத்தம் தரப்படுவதாக குற்றச்சாட்தி உள்ளனர். ஒருவர் நிலம் தன்னுடையது என கூறி பணம் வழங்க முயற்சி செய்துள்ளார். வறுமை நிலையில் உள்ள மக்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம். இதனால் “ஓட்டு கேட்டு வர வேண்டாம்” என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

புறக்கணிப்பு எச்சரிக்கை

தமிழகத்தில் வருகின்ற 2026 ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சென்னை துரைப்பாக்கம் பகுதி மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் சூழலில், இந்த பகுதியில் மக்கள் எடுத்துள்ள இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

வசிப்புரிமை சிக்கல்

சென்னை துரைப்பாக்கம் அறிஞர் அண்ணாநகர் 8வது தெரு மற்றும் பல்லவன் தெருவில் வசித்து வரும் பொதுமக்கள், தாங்கள் கடந்த 35 ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும், வீட்டுவரி, குடிநீர் வரி, ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் தங்களிடம் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், திடீரென ஒருவர் இந்த நிலத்தை தான் வாங்கியதாக கூறி, அங்கிருந்து அனைவரும் வெளியேற வேண்டும் என அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளார்.

மறைமுக அழுத்தம் மற்றும் மனஉளைச்சல்

குறித்த நபர் நேரடியாக வெளியேறுமாறு கூறாமல், ஒவ்வொரு வீட்டாரிடமும் தனித்தனியாக பணம் வழங்குவதாக கூறி மறைமுகமாக அழுத்தம் கொடுத்ததாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் ஏற்கனவே வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகி, எவ்வாறு எதிர்கொள்வது என தெரியாமல் தவிக்கின்றனர். இந்த பிரச்சினை நீண்ட நாட்களாக நீடித்தும் எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காதது மக்கள் அதிருப்தியை அதிகரித்துள்ளது.

Also Read: தவெகவுக்கு கூட்டணி தூது விட்ட பாஜக தலைமை? க்ரீன் சிக்னல் காட்டவிருந்த விஜய்

அதிகாரிகளுக்கு கோரிக்கை

இந்த நிலைமையை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, உண்மை நிலையை ஆய்வு செய்து, அந்த நபர் கூறும் தகவல்கள் பொய்யானவை என நிரூபிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாங்கள் வாழ்ந்து வரும் வீடுகளை பாதுகாக்க அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஓட்டு புறக்கணிப்பு அறிவிப்பு

இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காததால், “ஓட்டு கேட்டு யாரும் வர வேண்டாம்” என நோட்டீஸ் ஒட்டி, தேர்தலை புறக்கணிப்பதாக பகுதி மக்கள் அறிவித்துள்ளனர். இது தேர்தல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us