AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவெகவுக்கு கூட்டணி தூது விட்ட பாஜக தலைமை? க்ரீன் சிக்னல் காட்டவிருந்த விஜய்… திடீரென பின்வாங்க காரணம் என்ன!

Tvk- National Democratic Alliance: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்துக்கு கூட்டணி தூது விடுக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு க்ரீன் சிக்னல் காண்பிக்க இருந்த விஜய்க்கு கூட்டணி வேண்டாம் என்று இரு முக்கிய புள்ளிகள் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

தவெகவுக்கு கூட்டணி தூது விட்ட பாஜக தலைமை? க்ரீன் சிக்னல் காட்டவிருந்த விஜய்… திடீரென பின்வாங்க காரணம் என்ன!
தேஜகூட்டணியுடன் தவெக கூட்டணி அமைக்காதது ஏன்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 18 Mar 2026 08:10 AM IST

தமிழக அரசியலில் புது வரவான தமிழக வெற்றிக் கழகம் தேர்தலை சந்திப்பதற்கு தீவிரமாக ஆயத்தமாகி வருகிறது. இந்த நிலையில், திமுக கூட்டணியில் 21 கட்சிகள் இருக்கும் நிலையில், அந்த கூட்டணியை வீழ்த்துவதற்காக தங்களது கூட்டணியை வலுப்படுத்துவதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. அதன்படி, தேசிய ஜனநாயக கூட்டணியில், தமிழக வெற்றிக் கழகத்தை இணைக்க வேண்டும் என தேஜ கூட்டணி தலைமை விரும்பியதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், தவெக தலைவர் விஜய்யின் நெருங்கிய நண்பரான ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் மற்றும் அம் மாநிலத்தின் துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் வாயிலாக விஜய்க்கு கூட்டணி தூது விடப்பட்டதாக கூறப்படுகிறது. அவ்வாறு கூட்டணிக்கு வரும் பட்சத்தில் விஜய்க்கு முதல்வர் பதவி அல்லது துணை முதல்வர் பதவி, 60 சட்டமன்ற தொகுதிகள் வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

டெல்லியில் கூட்டணி பேச்சுவார்த்தை

இதனிடையே, கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்காக டெல்லிக்கு விஜயுடன் சென்ற ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் அங்கு பாஜக முக்கிய புள்ளிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, தமிழகம் திரும்பிய தவெக தலைவர் விஜய் மாவட்ட செயலாளர்களிடம் கூட்டணி தொடர்பான கருத்தை கேட்டதாக கூறப்படுகிறது. இதில், 120 மாவட்ட செயலாளர்களின் 24 மாவட்ட செயலாளர் தவிர மற்ற அனைவரும் கூட்டணி அமைக்கலாம் என்றும் விஜய் எடுக்கும் முடிவுக்கு சம்மதம் தெரிவிப்பதாகவும் கூறியிருந்தனராம்.

மேலும் படிக்க: K.P. Munusamy Tamil Nadu Election: அதிமுகவில் தொண்டனாக இணைந்து து.பொ.செயலராக உயர்ந்த கே.பி.முனுசாமி.. மீண்டும் வெற்றிக் கனியை பறிப்பாரா?

விஜய்யின் கூட்டணி முடிவுக்கு திடீர் தடை

இதன் காரணமாக, பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் முடிவுக்கு கிட்டத்தட்ட தவெக தலைவர் விஜய் நெருங்கி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், கூட்டணி அமைக்க கூடாது என்று விஜய்யின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கூறியதாக தெரிகிறது. இதனால், தேசிய ஜனநாயக கூட்டணியுடன், கூட்டணி என்ற முடிவில் இருந்து தவெக தலைவர் விஜய் சற்று பின் வாங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேஜ கூட்டணியில் விஜய் இணைய வாய்ப்பில்லை

இந்த நிலையில் தான், கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டினப்பாக்கத்தில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய விஜய், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்து களம் காணும் எனவும், இதற்காக கட்சியினர் தேர்தல் பணி ஆற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். அதன் அடிப்படையில், தவக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதி, பொதுச் செயலாளர் என். ஆனந்த் டி. நகர் தொகுதி, ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் தொகுதி என முதல் கட்ட தலைவர்களுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனால், தற்போதைய தகவல்களின் அடிப்படையில் தேஜ கூட்டணியில் விஜய் இணைய மாட்டார் என்றே தெரிகிறது.

மேலும் படிக்க: Agri S. S. Krishnamurthy Tamil Nadu Election: அதிமுகவில் “வேளாண்” புனைப்பெயருக்கு சொந்தக்காரர்… எம்எல்ஏ பதவியை தக்கவைத்துக் கொள்வாரா அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி!

Follow Us