நமது தலைமையில் தான் ஆட்சி.. அவதூறுகளை நம்ப வேண்டாம் – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்..
கடைசியில் ‘இந்த விஜயை என்னதான் செய்யலாம்?’ என்று நினைக்கும் போது தான் ‘இந்த கூட்டணியில் சேரப் போகிறார், அந்த கூட்டணியில் சேரப் போகிறார்’ என்று பொய்யான பிரச்சாரங்களை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த செய்திகளை எல்லாம் கேட்டு நீங்கள் கொஞ்சம் குழப்பத்தில் இருந்திருக்கலாம். அதனால் இங்கு மீண்டும் தெளிவாக ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன்.
சென்னை, மார்ச் 18, 2026: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தலைவர் விஜய் கூட்டத்தின் மத்தியில் பேசினார். அப்போது பேசிய அவர், “நாம் அரசியலுக்கு வந்ததிலிருந்து நம்மைப் பற்றி நிறைய வதந்திகள் பரவி வருகின்றன. ‘இந்த டீம், அந்த டீம்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான் எந்த டீமும் இல்லை; மக்களின் டீம் என்பதை எல்லாருக்கும் தெரிந்த பிறகு வேறு என்ன அவதூறு கிளப்பலாம் என்று முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு எதுவும் வேலை ஆகவில்லை.
நமது தலைமையில் தான் ஆட்சி:
கடைசியில் ‘இந்த விஜயை என்னதான் செய்யலாம்?’ என்று நினைக்கும் போது தான் ‘இந்த கூட்டணியில் சேரப் போகிறார், அந்த கூட்டணியில் சேரப் போகிறார்’ என்று பொய்யான பிரச்சாரங்களை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த செய்திகளை எல்லாம் கேட்டு நீங்கள் கொஞ்சம் குழப்பத்தில் இருந்திருக்கலாம். அதனால் இங்கு மீண்டும் தெளிவாக ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன்.
மேலும் படிக்க: ஆட்டோவுக்கான எரிவாயுவை வீட்டு சிலிண்டர்களில் நிரப்பும் மக்கள் – என்ன நடக்கும் தெரியுமா?
நாங்கள் எப்போதும் மதச்சார்பற்ற கொள்கை மற்றும் சமூகநீதியின் நிலைப்பாட்டில் தான் இருக்கிறோம். அந்த நிலைப்பாட்டில் எப்போதும் சமரசம் செய்ய மாட்டோம். நமது தலைமையில்தான் ஆட்சி அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
யாருக்காகவும், எதற்காகவும் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை:
நமது முதல் மாநாட்டிலேயே ‘அரசியலில் யாருக்காகவும், எதற்காகவும் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்று கூறியிருந்தேன். அதற்கான எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை.
மேலும் படிக்க: செயற்பாட்டு வரைவு 2026.. நாளை வெளியிடப்படும் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை..
யார் என்ன அவதூறு பரப்பினாலும் தயவு செய்து அதை நம்பாதீர்கள். எல்லாம் வல்ல இறைவனின் அருளால் நாம் நினைத்த இலக்கை நிச்சயமாக அடைவோம்.
இன்று எனது இஸ்லாமிய சகோதரர், சகோதரிகளுக்கு என் ரமலான் நல்வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்; வெற்றி நிச்சயம்” என தெரிவித்தார்.