AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தேஜ கூட்டணியில் இருந்து விலகி தவெகவுடன் இணைகிறதா என்.ஆர். காங்கிரஸ்? கள நிலவரம் என்ன!

NR Congress Alliance: புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் லட்சிய ஜனநாயக கட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் என்.ஆர்.காங்கிரஸ் அந்த கூட்ணியில் இருந்து விலகி தவெகவுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. பாஜக தலைவர்கள் இடையே இறதி கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

தேஜ கூட்டணியில் இருந்து விலகி தவெகவுடன் இணைகிறதா என்.ஆர். காங்கிரஸ்? கள நிலவரம் என்ன!
தவெகவுடன் கூட்டணி அமைக்கிறதா என்.ஆர்.காங்கிரஸ்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 18 Mar 2026 11:36 AM IST

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் என். ஆர். காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று ஆட்சி அமைத்தன. வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் என். ஆர். காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகளும், பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு 14 தொகுதிகள் என வாய்மொழியாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜோஸ் சார்லஸ் மாட்டினின் லட்சிய ஜனநாயக கட்சியை இணைப்பதற்கு பாஜக முன் வந்தது. ஆனால், என். ஆர். காங்கிரஸ் அதனை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அத்துடன், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரிக்கை ஆகியவற்றை பாஜக தலைமையிடம் என். ஆர். காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி முன் வைத்திருந்தார்.

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை கூட்டத்தை புறக்கணித்து ரங்கசாமி

மேலும், லட்சிய ஜனநாயக கட்சியை கூட்டணியில் இணைத்தால் என். ஆர். காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறும் என்று அதன் தலைவர் ரங்கசாமி தெரிவித்து இருந்தார். இதில், லட்சிய ஜனநாயக கட்சியை கூட்டணியில் சேர்க்க வேண்டாம் என்ற என்.ஆர். காங்கிரசின் கருத்தை பாஜக நிராகரித்ததாக கூறப்படுகிறது. இதனால், அதிருப்தி அடைந்த முதல்வர் ரங்கசாமி தனியார் விடுதியில் நடைபெற இருந்த கூட்டணி பேச்சு வார்த்தையை புறக்கணித்திருந்தார். இதனால், அவரது வருகையை எதிர்பார்த்து காத்திருந்த புதுச்சேரி பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான மன்சுக் மாண்டவியா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

மேலும் படிக்க: இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு… தொகுதியை குறைக்க காரணம் இதுதான்… மு.வீரபாண்டியன் விளக்கம்!

டெல்லி விரைந்த பாஜக நிர்வாகிகள்

இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தலைமைக்கு நேரில் தெரிவிப்பதற்காக மன்சுக் மாண்டவியா, பாஜக மாநில தலைவர் வி. பி. ராமலிங்கம், சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் டெல்லி சென்றனர். அங்கிருந்து, ரங்கசாமியை தொடர்பு கொண்ட பாஜக தலைமை சமரசம் செய்தது. ஆனால், அதனை ரங்கசாமி ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், டெல்லியில் இன்று மீண்டும் பாஜக தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில், ரங்கசாமியின் நிபந்தனை முன்வைக்கப்பட்டு ஏற்கப்படுமா என்பது விரைவில் தெரியவரும்.

என்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் தவெக கூட்டணி

இந்த நிலையில், ரங்கசாமியின் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் தமிழக வெற்றிக் கழகத்துடன், என். ஆர். காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதற்கு ஆயத்தமாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதே போல, என். ஆர். காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை பாஜக ஏற்கும் நிலையில், லட்சிய ஜனநாயக கட்சி 30 தொகுதியிலும் தனித்து போட்டியிடுவதற்கும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: Tamil Nadu Assembly Election: இனி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க முடியாது! விவரம் உள்ளே!

Follow Us