Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Maareesan: ரிலீசுக்கு தயாரான ‘மாரீசன்’.. வெளியான சென்சார் சான்றிதழ்!

Maareesan Movie Update : இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில், மிக பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகியிருப்பது மாரீசன். இந்த படத்தில் முன்னணி நடிகர்களாக வடிவேலு மற்றும் ஃபகத் பாசில் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது வரும் 2025, ஜூலை 25ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு சென்சார் குழு யு/ஏ தரச் சான்றிதழைக் கொடுத்துள்ளது.

Maareesan: ரிலீசுக்கு தயாரான ‘மாரீசன்’.. வெளியான சென்சார் சான்றிதழ்!
மாரீசன் திரைப்படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 17 Jul 2025 11:56 AM

மலையாள சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராகி இருந்து வருபவர் ஃபகத் பாசில் (Fahadh Faasil). இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாரீசன் (Maareesan). இந்த படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் (Sudheesh Sankar) இயக்கியுள்ளார். இவர் பிரபல மலையாள இயக்குநர் ஆவார். இந்த மாரீசன் திரைப்படத்தில் நடிகர் ஃபகத் பாசிலுடன் முன்னணி வேடத்தில் நடிகர் வடிவேலுவும் (Vadivelu) இணைந்து நடித்துள்ளார். இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இந்த மாரீசன் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து FAFA என்ற பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் மற்றும் ஏ.பி. இன்டர்நெஷனல் போன்ற தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படமானது திருட்டு மற்றும் மனிதாபிமான கதை கொண்ட படமாக உருவாகியுள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு சென்சார் குழு யு/ஏ +13 என்ற தரச் சான்றிதழை வழங்கியுள்ளது. இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : ரஜினிகாந்த்தின் கூலி – மோனிகா பாடலின் மேக்கிங் வீடியோ !

மாரீசன் படக்குழு வெளியிட்ட சென்சார் சான்றிதழ் பதிவு :

ஃபகத் பாசில் மற்றும் வடிவேலு கூட்டணி :

நடிகர்கள் வடிவேலு மற்றும் ஃபகத் பாசில், இந்த படத்திற்கு முன் ஏற்கனவே தமிழில் ஒரு படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் நடிகர் ஃபகத் பாசில் நெகடிவ் ரோலில் நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்ததாக மீண்டும் மாரீசன் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த மாரீசன் படமானது மிகவும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ளது.

இதையும் படிங்க : இயக்குநர் பிரேம் குமாருடன் இணையும் சீயான் விக்ரம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மாரீசன் திரைப்படத்தின் கதைக்களம் :

ஃபகத் பாசில் மற்றும் வடிவேலு இருவரின் முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படமானது மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் ஃபகத் பாசில் திருடன் கதாபாத்திரத்திலும், வடிவேலு மறதி நோயால் பாதிக்கப்பட்டவராகவும் நடித்துள்ளார். இதில் நடிகர் வடிவேலு மிகவும் பணக்காரன் என்ற நிலையில், அவரிடம் இருந்து நடிகர் ஃபகத் பாசில் பணத்தைக் கொள்ளையடிக்கிறாரா அல்லது அவரை வந்த இடத்திற்கே கொண்டு விடுகிறாரா என்பதுதான் இப்படத்தின் மைய கதையாகும். இந்த படமானது வரும் 2025, ஜூலை 25ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.