Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ரஜினிகாந்த்தின் கூலி – மோனிகா பாடலின் மேக்கிங் வீடியோ !

Monica Song BTS Video : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான மோனிகா பாடல் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்தப் பாடலின் மேக்கிங் வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ரஜினிகாந்த்தின் கூலி – மோனிகா பாடலின் மேக்கிங் வீடியோ !
பூஜா ஹெக்டே
Karthikeyan S
Karthikeyan S | Published: 16 Jul 2025 20:21 PM

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் கூலி. இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் 14, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளைத் துவங்கியுள்ளனர். அந்த வகையில் இந்தப் படத்தில் இருந்து இதுவரை சிக்கிட்டு, மோனிகா என இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக பூஜா ஹெக்டே நடனமாடியுள்ள மோனிகா பாடல் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. குறிப்பாக இந்தப் பாடலில் சௌபின் சாஹிரின் நடனம் ஹைலைட்டாக அமைந்துள்ளது. இந்த நிலையில் மோனிகா பாடலின் மேக்கிங் வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மோனிகா பாடலுக்கு பூஜா ஹெக்டே, சௌபின் சாஹிர் நடனமாடியுள்ள நிலையில், இந்தப் பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடலை சுப்லாஷ்னி, அசல் கோலார் இணைந்து பாடியிருக்கின்றனர். இந்த நிலையில் இந்தப் பாடலின் மேக்கிங் வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க: கூலி படத்தில் சௌபின் சாஹிர் ரோலில் முதலில் நடிக்கவிருந்தவர் இவரா?

மோனிகா பாடலின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம்

 

இதையும் படிக்க: கூலி பட ட்ரெய்லர் எப்போது? -லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்!

சஞ்சய் தத் குற்றச்சாட்டுக்கு லோகேஷ் கனகராஜ் பதில்

சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் சஞ்சய் தத், லியோ படத்தில் லோகேஷ் கனகராஜ் தன்னை சரியாக பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஹாலிவுட் ரிப்போர்ட்டர் சேனலுக்கு பேட்டியளித்த லோகேஷ் கனகராஜிடம், சஞ்சய் தத் குற்றச்சாட்டு குறித்து தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், இது தொடர்பாக இயக்குநர் சஞ்சய் தத், எனக்கு போன் செய்து, நான் நகைச்சுவையாக தான் தெரிவித்தேன். ஆனால் அதனை மீடியாக்கள் எனது குற்றச்சாட்டாக பதிவு செய்திருக்கிறேன். இருப்பினும் எனது அடுத்த படத்தில் அவரை நான் சரியாக பயன்படுத்துவேன் என்றார்.

மேலும் திரைப்படங்களின் விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த லோகேஷ், கூலி படம் வெளியானவுடன் நண்பர்களுடன் யாருக்கும் சொல்லாமல் வெளியூர் சென்றுவிடுவேன். திரும்பி வரும் வரை விமர்சனங்கள் எதையும் பார்க்க மாட்டேன் என தெரிவித்திருந்தார்.