Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Coolie : கூலி படத்தில் சௌபின் சாஹிர் ரோலில் முதலில் நடிக்கவிருந்தவர் இவரா?

Soubin Shahir Role In Coolie Movie : தமிழ் சினிமாவில் இந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகவும் பிரம்மாண்ட திரைப்படம் கூலி. லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்த்தின் கூட்டணியில் உருவாகியிருக்கும் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படத்தில் நடிகர் சௌபின் சாஹிர் நடித்துள்ள கதாபாத்திரத்தில், முதலில் நடிக்கவிருந்த மலையாள நடிகர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

Coolie : கூலி படத்தில் சௌபின் சாஹிர் ரோலில் முதலில் நடிக்கவிருந்தவர் இவரா?
சவுபின் ஷாஹிர் மற்றும் ரஜினிகாந்த் Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 15 Jul 2025 18:17 PM

லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் (Rajinikanth) கூட்டணியில் உருவாகியிருக்கும் படம்தான் கூலி (Coolie). இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, தென்னிந்தியப் பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் முன்னணி நாயகனாக நடிக்க அவருடன் நடிகர்கள் நாகார்ஜுனா (Nagarjuna), அமீர்கான் (Aamir Khan), உபேந்திரா, ஸ்ருதி ஹாசன் (Shruthi Haasan), சௌபின் சாஹிர் (Soubin Shahir), மற்றும் சத்யராஜ் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். பான் இந்திய மொழி நடிகர்கள் இணைந்து நடித்திருக்கும் திரைப்படமாக இந்த கூலி உருவாகியுள்ளது. இப்படத்திலிருந்து சமீபத்தில் வெளியான மோனிகா (Monica) பாடலானது இணையத்தில் டிரெண்டிங் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது.

இப்பாடலில் பூஜா ஹெக்டேவுடன் (Pooja Hegde), நடிகர் சௌபின் சாஹிர் இணைந்து நடனமாடியிருந்தார். இந்நிலையில், இது தொடர்பான வீடியோக்கள் மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் சௌபின் சாஹிர் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா? அது வேறு யாருமில்லை லோகேஷ் கனகராஜின் விக்ரமில் நடித்த ஃபகத் பாசில்தான் (Fahadh Faasil). இது குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ஒரு நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க : கூலி பட ட்ரெய்லர் எப்போது? -லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்!

ஃபகத் பாசில் கூலி படத்தில் நடிக்காததற்குக் காரணம்

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இந்த தகவலைப் பற்றிக் கூறியிருக்கிறார். கூலி படத்தில் நடிகர் சவுபின் ஷாஹிர் நடித்திருக்கும் கதாபாத்திரம், முதலில் நடிகர் ஃபகத் பாசிலை மனதில் வைத்துத்தான் எழுதினேன். ஆனால் நடிகர் ஃபகத் பாசிலால் கால்ஷீட் காரணமாக இப்படத்தின் நடிக்கமுடியவில்லை. இந்த கதாபாத்திரத்தை உருவாக்குவதற்கு சுமார் 6 மாதங்கள் நேரம் எடுத்துக்கொண்டேன்” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : ‘தண்டட்டி’ பட இயக்குநருடன் இணைந்த நடிகர் கவின் ராஜ்.. அப்டேட் இதோ!

மோனிகா பாடல் குறித்து சன் பிக்சர்ஸ் பதிவு :

சமீபத்தில் கூலி படத்தின் இரண்டாவது பாடலான மோனிகா பாடல் வெளியானது. இப்பாடலில் நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு நடனமாடியிருந்தார். இவருடன் இந்த பாடலில் மலையாள நடிகர் சௌபின் சாஹிர் இணைந்து நடனமாடியிருந்தார். அவரது நடனம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி கூலி திரைப்படம் ரிலீசாகவுள்ள நிலையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.