Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Maareesan : வடிவேலு மற்றும் ஃபகத் பாசிலின் ‘மாரீசன்’ – ட்ரெய்லர் இதோ!

Maareesan Movie Trailer : இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாரீசன். இந்த படத்தில் வடிவேலு மற்றும் ஃபகத் பாசில் இணைந்து நடித்துள்ளனர். மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. தற்போது வெளியான ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Maareesan : வடிவேலு மற்றும் ஃபகத் பாசிலின் ‘மாரீசன்’ – ட்ரெய்லர் இதோ!
மாரீசன் திரைப்பட டிரெய்லர்
Barath Murugan
Barath Murugan | Updated On: 14 Jul 2025 17:45 PM

மலையாள இயக்குநர் சுதீஷ் சங்கர் (Sudheesh Sankar) தமிழில் இயக்குநராக அறிமுகமாகும் படம்தான் மாரீசன் (Maareesan). இந்த் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிகர்கள் வடிவேலு (Vadivelu) மற்றும் ஃபகத் பாசில் (Fahadh Faasil) இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது தமிழ் மற்றும் மலையாள மொழியை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு முன் நடிகர் வடிவேலு, ஃபகத் பாசிலுடன் மாமன்னன் (Maamannan) என்ற படத்தில் இணைந்து நடித்திருக்கிறார். இந்த படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் வடிவேலு மற்றும் ஃபகத் பாசில் இருவரும் எதிர் எதிர் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தின் வரவேற்பை அடுத்ததாக மீண்டும், இந்த மாரீசன் திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க , சூப்பர் குட் பிலிம்ஸ் (Super Good Films) மற்றும் ஏ.பி. இன்டெர்நேஷ்னல் (A.P. International) தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

இப்படம் வரும் 2025, ஜூலை 25ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில தினங்கள் மட்டும் உள்ள நிலையில், படக்குழு ட்ரெய்லரை வெளியிட்டுள்ளார். தற்போது வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : அதிரடி கேங்ஸ்டராக அல்போன்ஸ் புத்ரன்.. வெளியான சூப்பர் வீடியோ!

மாரீசன் பட ட்ரெய்லர் பதிவு :

மாரீசன் பட ட்ரெய்லரில் இதைக் கவனித்தீர்களா?

இந்த மாரீசன் திரைப்படத்தில் நடிகர் ஃபகத் பாசில் திருடனைப் போல நடித்துள்ளார். மேலும் வடிவேலு இப்படத்தில் அல்சைமர் என்ற நோயினால் பாதிக்கப்பட்ட நபரைப்போல் நடித்துள்ளார். வடிவேல் மிகப் பணக்காரராக இருக்கும் நிலையில், அவரிடம் இருந்து எவ்வாறு பணத்தைக் கொள்ளையடிக்கலாம் என நடிகர் ஃபகத் பாசில் திட்டம் போடுகிறார். அவர் நடிகர் வடிவேலுவிடம் இருந்து பணத்தை திருடுகிறாரா ?, இல்லையா ? என்பது இப்படத்தின் கதையாகும். இந்த கதைகளுக்கும் நடுவே இப்படத்தில் நகைச்சுவை, எமோஷனல் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : தலைவன் தலைவி படம் ஒரு உண்மை கதை – இயக்குநர் பாண்டிராஜ்!

மாரீசன் திரைப்படத்தின் நடிகர்கள்

இந்த படத்தில் நடிகர் வடிவேலு மற்றும் ஃபகத் பாசில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் நிலையில், நடிகை கோவை சரளாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் விவேக் பிரசன்னா, லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவண சுப்பையா மற்றும் சித்ரா என பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படமானது வரும் 2025, ஜூலை 25ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.