Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Balti: அதிரடி கேங்ஸ்டராக அல்போன்ஸ் புத்ரன்.. வெளியான சூப்பர் வீடியோ!

Alphonse Puthrens Balti Movie : தென்னிந்திய மக்கள் மத்தியில் பிரேமம் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன். இவர் இயக்குநராக படங்களை இயக்கி ஹிட் கொடுத்திருக்கும் நிலையில், தற்போது படங்ககளில் முக்கிய நடிகராகவும் நடிக்கத் தொடங்கியுள்ளார். சாய் அபயங்கர் மலையாளத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கும், பல்டி படத்தில் சோடா பாபு என்ற ரோலில் நடித்துள்ளார். இது குறித்தான வீடியோ வெளியாகியுள்ளது.

Balti: அதிரடி கேங்ஸ்டராக அல்போன்ஸ் புத்ரன்.. வெளியான சூப்பர் வீடியோ!
அல்போன்ஸ் புத்ரன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 14 Jul 2025 15:57 PM

மலையாள சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் (Alphonse Puthren). இவர் கடந்த 2015ம் ஆண்டு வெளியான பிரேமம் (Premam) என்ற திரைப்படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்தில் நிவின் பாலி (Nivin Pauly), சாய் பல்லவி (sai Pallavi), மடோனா செபஸ்டியன் மற்றும் அனுபமா பரமேஷ்வரன் என பல்வேறு பிரபலங்கள் இணைந்த நடித்திருந்தனர். இந்த படமானது பான் இந்தியா அவரை மக்கள் மத்தியில் பிரபலமானது. இந்த படத்தை அடுத்ததாக மக்கள் மத்தில் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரனும் பிரபலமானார். இந்த படத்தை அடுத்ததாக இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் கோல்ட் (Gold) என்ற படத்தையும் இயக்கியிருந்தார். இப்படத்தில் நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் மற்றும் நயன்தாரா நடித்திருந்தனர் . கடந்த 2022ம் ஆண்டு வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது . இதை அடுத்த தமிழில் கிப்ட் (Gift) என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.

இந்நிலையில், இந்த படங்களைத் தொடர்ந்து சினிமாவில் நடிகராகவும் நடிக்கத் தொடங்கியுள்ளார். இவர் ஏற்கனவே யுனேட்டட் கிங்டம் ஆப் கேரளா என்ற படத்தில் மேத்தியுவ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், இப்படத்தை அடுத்ததாக அதிரடி கேங்ஸ்டர் ரோலில், பல்டி (Balti) திரைப்படத்தில் நடித்துள்ளார். இது குறித்த கதாபாத்திரம் அறிமுக கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமானார்.. ரசிகர்கள் அதிர்ச்சி

பல்டி படக்குழு வெளியிட்ட அல்போன்ஸ் புத்ரன் அறிமுக வீடியோ :

இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் இந்த படத்தில் “சோடா பாபு” (Soda Babu) என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் இப்படத்தின் மூலமாகத்தான் அதிரடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் நடிப்பில் வெளியாகும் இரண்டாவது படமாக இந்தப் பல்டி படம் அமைந்துள்ளது. இந்நிலையில், இயக்குநர் ஆல்போல் புத்திரனின் கதாபாத்திரம் அறிமுக வீடியோ ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : வெற்றிமாறன் படம்.. முரட்டு ட்ரான்ஸ்ஃபர்மேசன் செய்யும் சிலம்பரசன்?

பல்டி திரைப்படம் :

மலையாள இயக்குநர் உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம்தான் பல்டி. இந்தப் படத்தில் நடிகர் ஷோன் நிகம் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் நடிகர்கள் சாந்தனு மற்றும் நடிகை ப்ரீத்தி அஸ்ரானி முக்கிய நடித்துள்ளனர். இந்தப் படமானது கபடி கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது.

இந்த பல்டி படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர் இப்படத்தின் மூலமாகத்தான் மலையாளத்தில் அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படமானது வரும் 2025ம் ஆண்டு ஓணம் பண்டிகையை வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.