Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Rashmika Mandanna : டாக்சிக் உறவு.. டேட்டிங் குறித்து பேசி விமர்சனத்தில் சிக்கிய ராஷ்மிகா மந்தனா!

Rashmika Mandanna About Dating : பான் இந்திய இளம் நாயகியாக இருந்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் சுமார் பான் இந்திய மொழிகளில் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் நடிகை ராஷ்மிகா மந்தனா டேட்டிங் குறித்து பேசி விமர்சனத்தில் சிக்கியுள்ளார்

Rashmika Mandanna : டாக்சிக் உறவு.. டேட்டிங் குறித்து பேசி விமர்சனத்தில் சிக்கிய ராஷ்மிகா மந்தனா!
ராஷ்மிகா மந்தனாImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 14 Jul 2025 17:11 PM

நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna), பான் இந்திய நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். இவரை ரசிகர்கள் நேஷனல் க்ரஷ் என்றும் அன்புடன் அழைத்து வருகின்றனர். இவர் கன்னட சினிமாவின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது பான் இந்திய மொழிகளில் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து அசத்தி வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.மேலும் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் குபேரா (Kuberaa). நடிகர் தனுஷின் (Dhanush) முன்னணி நடிப்பில் வெளியான இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படமும் எதிர்பார்த்ததை போல மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புகள் கிடைத்தது. இந்த படத்தை அடுத்ததாக ராஷ்மிகா மந்தனா, இந்தியில் 2 திரைப்படங்களிலும் தெலுங்கில் மைசா (Mysaa) என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் நேர்காணல் ஒன்றில் பேசிய விஷயம் ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. அந்த நேர்காணலில் ராஷ்மிகா மந்தனாவிடம், எப்படிப்பட்ட நபரை டேட்டிங் செய்வீர்கள் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது, அதற்கு ராஷ்மிகா மந்தனா கொடுத்த பதில் ரசிகர்கள் மத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : வெற்றிமாறன் படம்.. முரட்டு ட்ரான்ஸ்ஃபர்மேசன் செய்யும் சிலம்பரசன்?

நடிகை ராஷ்மிகா மந்தனா பேசிய விஷயம் :

அந்த நேர்காணலில் நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம், நீங்கள் அனிமல் திரைப்படத்தில் வரும் ரன்பீர் கபூர் கதாபாத்திரத்தைப் போல, நிஜத்தில் ஒரு நபர் இருந்தால் அவரை டேட்டிங் செய்வீர்களா எனக் கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு நடிகை ராஷ்மிகா மந்தனா, “நிச்சயமாக டேட்டிங் செய்வேன், ஒருவர் உங்களை உண்மையாகவும், ஆழமாகவும் காதலித்தால், அவர்களும் உங்களை நிஜமாகவே காதலித்திருந்தால். நிச்சயமாக அவர்களிடையே மாற்றம் ஏற்படும்” என நடிகை ராஷ்மிகா மந்தனா ஓபனாக பேசியிருந்தார்.

இதையும் படிங்க : அல்லு அர்ஜுன்- அட்லீ படம் – நெகடிவ் ரோலில் நடிக்கும் ராஷ்மிகா?

இந்நிலையில், இந்த் தகவல் ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. அனிமல் படத்தில் நடிகர் ரன்பீர் கபூரின் கதாபாத்திரம் ரொம்பவும் டாக்சிக்கானது எனவும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இது ரசிகர்கள் மத்தியில் ட்ரோலாக உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஷ்மிகா மந்தனாவின் மைசா திரைப்பட அறிவிப்பு :

நடிகை ராஷ்மிகா மந்தனா, குபேரா படத்தை அடுத்து இந்தியில், தாமா உள்ளிட்ட நடித்து வருகிறார்.மேலும் தெலுங்கில் தி கேர்ள்பிரண்ட் மற்றும் மைசா என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்ததாக அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீயின் கூட்டணியில் உருவாகும் படத்தில் நெகடிவ் ரோலில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை.