Maareesan : ஃபகத் பாசில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. ‘மாரீசன்’ பட ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது தெரியுமா?
Maareesan Movie Trailer Release Announcement : மலையாள சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக இருந்து வருபவர் ஃபகத் பாசில் . வடிவேலுவுடன் இவர் இணைந்து நடித்திருக்கும் படம் மாரீசன். இப்படம் வரும் 2025, ஜூலை 25ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், தற்போது இப்படக்குழு படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர்கள் ஃபகத் பாசில் (Fahadh Fasil) மற்றும் வடிவேலுவின் (Vedivelu) கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாரீசன் (Maareesan). இந்த படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் (Sudheesh Sankar) இயக்கியுள்ளார். இவர் பிரபல மலையாள இயக்குநர் ஆவார், இந்த மாரீசன் திரைப்படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்த திரைப்படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் கொண்டதிரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு முன் நடிகர் வடிவேலு மற்றும் ஃபகத் பாசில் இருவரும் மாமன்னன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் இவர்கள் இருவரும் எதிரெதிர் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதனையடுத்து மீண்டும், இந்த மாரீசன் திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இப்படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி தயாரித்துள்ளார். மேலும் அவருடன் ஏ.பி. எண்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. இந்த படமானது மாறுபட்ட டிராவல் சார்ந்த கதைக்களத்துடன் உருவாகியிருக்கிறது.




இதையும் படிங்க : அல்லு அர்ஜுன்- அட்லீ படம் – நெகடிவ் ரோலில் நடிக்கும் ராஷ்மிகா?
இப்படம் வரும் 2025, ஜூலை 25ம் தேதியில் இப்படம் ரிலீசாகவுள்ள நிலையில், படக்குழு டிரெய்லர் ரிலீஸ் எப்போது என்பதைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் டிரெய்லர் நாளை, 2025 ஜூலை 14ம் தேதி, மாலை 05 :04 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விவேக் பிரசன்னா வெளியிட்ட மாரீசன் டிரெய்லர் ரிலீஸ் பதிவு
Get ready for #Maareesan Trailer Releasing Tomorrow at 5:04 PM
The wait ends, The magic begins !!A @thisisysr Musical
Produced by @SuperGoodFilms_ #FaFa #MaareesanTrailer #SudheeshSankar @actorvivekpra #FiveStar @krishnakum25249 @moorthyisfine @dopkalai @sreejithsarang pic.twitter.com/0uklXTHyEE— Actor Vivek Prasanna (@actorvivekpra) July 13, 2025
மாரீசன் திரைப்படத்தின் கதைக்களம்
இந்த படத்தின் கதைக்களமானது, நடிகர் வடிவேலு அல்சைமர் நோயினால் பாதிக்கப்பட்டவர், அவரிடம் பணம் அதிகமாக இருக்கிறது. இதை பார்த்த நடிகர் ஃபகத் பாசில், அவரிடம் இருந்து எவ்வாறு பணத்தைக் கொள்ளையடிக்க முயல்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதையாகும். இப்படத்தில் நடிகர் ஃபகத் பாசில் திருடனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ராஷ்மிகா மந்தனாவின் ‘தி கேர்ள்ஃப்ரெண்ட்’ – முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது?
இந்த படமானது தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. மேலும் இப்படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில நாட்கள் மட்டும் உள்ள நிலையில், படக்குழு ட்ரெய்லர் ரிலீஸை பற்றியும் அறிவித்துள்ளது. முதல் பாடல் வரவேற்பை அடுத்து இப்படத்தின் ட்ரெய்லர் வரும் 2025, ஜூலை 14ம் தேதியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.