Rashmika Mandanna: அல்லு அர்ஜுன்- அட்லீ படம் – நெகடிவ் ரோலில் நடிக்கும் ராஷ்மிகா?
Allu Arjun AA22 Movie Update : இயக்குநர் அட்லீயின் இயக்கத்தில் பான் இந்தியத் திரைப்படமாக உருவாகிவருவது AA22x A06 திரைப்படம். நடிகர் அல்லு அர்ஜுனின் முன்னணி நடிப்பில் இப்படம் உருவாகிவருகிறது. இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர் நெகடிவ் ரோலில் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகனாக வலம்வருபவர் அல்லு அர்ஜுன் (Allu Arjun). இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகி பான் இந்திய அளவில் வெற்றிபெற்ற திரைப்படம் புஷ்பா 2 (Pushpa 2) . இந்த படத்தை இயக்குநர் சுகுமார் (Sukumar) இப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியாகி, சுமார் ரூ. 2000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் இணைந்திருக்கும் திரைப்படம் AA22x A06. இந்த படத்தை பிரபல இயக்குநர் அட்லீ குமார் (Atlee Kumar) இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம் அவர் தெலுங்கிலும் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில், ஹாலிவுட் திரைப்படங்களைப் போல மிகப் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்த படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுடன் முன்னணி வேடத்தில் நடிகை தீபிகா படுகோன் (Deepika Padukone நடித்து வருகிறார். இந்நிலையில், இவருடன் இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் (Rashmika Mandanna) இணைந்து நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதில் நடிகை ராஷ்மிகா இதுவரை நடித்திடாத, நெகடிவ் ரோலில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகி வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் எனத் தெரியவில்லை. இது தினத்தந்தி செய்தி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.




அல்லு அர்ஜுனுடன் மீண்டும் இணையும் ராஷ்மிகா மந்தனா :
தெலுங்கு அல்லு அர்ஜுனின் 22வது திரைப்படமாக உருவாகிவருவது AA22x A06 திரைப்படம். இப்படத்தை அட்லீ இயக்க, சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மொத்தத்தில் இப்படமானது சுமார் ரூ. 850 கோடிகளுக்கு மேல் பொருட்செலவில் உருவாகிவருகிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுடன் , தீபிகா படுகோன் இணைந்து நடித்துவரும் நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவும் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது.
இதையும் படிங்க : ராஷ்மிகா மந்தனாவின் ‘தி கேர்ள்ஃப்ரெண்ட்’ – முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது?
புஷ்பா மற்றும் புஷ்பா 2 திரைப்படத்தை அடுத்ததாக மீண்டும் 3வது முறையாக நடிகர் அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா மந்தனா இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா நெகடிவ் ரோலில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தீபிகா படுகோன் AA22x A06 பட அறிமுக வீடியோ :
The Queen marches to conquer!❤🔥
Welcome onboard @deepikapadukone✨#TheFacesOfAA22xA6▶️ https://t.co/LefIldi0M5#AA22xA6 – A Magnum Opus from Sun Pictures💥@alluarjun @Atlee_dir#SunPictures #AA22 #A6 pic.twitter.com/85l7K31J8z
— Sun Pictures (@sunpictures) June 7, 2025
இதையும் படிங்க : அட்லி படத்தில் 4 வேடங்களில் நடிக்கும் அல்லு அர்ஜுன்? வெளியான தகவல்
இந்த AA22x A06திரைப்படமானது ஹாலிவுட் பட ரேஞ்சில் உருவாகிவரும் நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் முடிவதற்கே சுமார் 1 ஆண்டுகளுக்கும் மேல் ஆகும் எனக் கூறப்படுகிறது. இதுவரை இப்படத்திலிருந்து அல்லு அர்ஜுன் மற்றும் தீபிகா படுகோன் மட்டும் நடிப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன் 4 வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படும் நிலையில், தீபிகா படுகோனுடன் மேலும் 3 நடிகைகள் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.