Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

என்னடி சித்திரமே.. இங்க நா பாத்திரமே.. இசை வெளியீட்டு விழாவில் நடனமாடிய விஜய் சேதுபதி – நித்யா மேனன்!

Vijay Sethupathi And Nithya Menon Dance : நடிகர் விஜய் சேதுபதியின் முன்னணி நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம் தலைவன் தலைவி. இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில், பொட்டல முட்டையே என்ற பாடலுக்கு, நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இணைந்து நடனமாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது.

என்னடி சித்திரமே.. இங்க நா பாத்திரமே.. இசை வெளியீட்டு விழாவில் நடனமாடிய விஜய் சேதுபதி – நித்யா மேனன்!
விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 13 Jul 2025 21:03 PM

இயக்குநர் பாண்டிராஜ் (Pandiraaj) இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன் (Etharkkum thunindhavan). நடிகர் சூர்யாவின் முன்னணி நடிப்பில் வெளியான இப்படமானது மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. இந்த படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருக்கும் திரைப்படம் தலைவன் தலைவி (Thalaivan Thalaivii). இந்த படத்தில் கதாநாயகனை நடிகர் விஜய் சேதுபதி (Vijay sethupathi) நடித்துள்ளார். மேலும் இவருக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனனும் (Nithya Menon) இப்படத்தில் இணைந்துள்ளார். இயக்குநர் பாண்டிராஜ் திரைப்படம் என்றாலே சொல்லவே தேவையில்லை, இப்படத்தின் கதைக்களமானது முழுக்க கிராமத்துத் திரைப்படமாக உருவாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஆகாச வீரன் என்ற கதாபாத்திரத்திலும், நித்யா மேனன் பேரரசி என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

இப்படமானது வரும் 2025, ஜூலை 25ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு இப்படத்தின் இசை வெளியிட்டு விழா கடந்த 2025, ஜூலை 12ம் தேதியில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நித்யா மேனன் மற்றும் விஜய் சேதுபதியும் இணைந்து, “பொட்டல முட்டையே” (Pottala Muttaye) என்ற பாடலுக்கு இணைந்து நடனமாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க :  அல்லு அர்ஜுன்- அட்லீ படம் – நெகடிவ் ரோலில் நடிக்கும் ராஷ்மிகா?

இணையத்தில் வைரலாகும் விஜய் சேதுபதி மற்றும் நித்யாமேனனின் நடன வீடியோ :

விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி திரைப்படம் :

இந்த திரைப்படமானது விஜய் சேதுபதிக்கு மிக பிரம்மாண்ட படமாக உருவாகி வருகிறது. பல வருடங்களுக்குப் பின் விஜய் சேதுபதி கிராமம் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்க, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்திற்காக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இதையும் படிங்க : ராஷ்மிகா மந்தனாவின் ‘தி கேர்ள்ஃப்ரெண்ட்’ – முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது?

இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து, இதுவரை பொட்டல முட்டையே மற்றும் ஆகாச வீரன் என இரு பாடல்கள் வெளியாகியிருக்கிறது. இதில் பொட்டல முட்டையே என்ற பாடலானது இணையத்தில் மக்கள் மத்தியில் ட்ரெண்டிங் பாடலில் ஒன்றாக இருந்து வருகிறது.

தலைவன் தலைவி ட்ரெய்லர் ரிலீஸ் :

இந்த படமானது வரும் 2025, ஜூலை 25ம் தேதியில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீசிற்கு சில தினங்கள் மட்டும் உள்ள நிலையில், இந்த வாரத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸிற்கான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.