Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Thalaivan Thalaivii : விஜய் சேதுபதியின் ‘தலைவன் தலைவி’ – 2வது பாடல் வெளியானது!

Thalaivan Thalaivii Movie Aagasa Veeran Song : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி முன்னணி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் தலைவன் தலைவி. இப்படத்தின் முதல் பாடல் வரவேற்பைத் தொடர்ந்து, மேலும் இப்படத்திலிருந்து இரண்டாவது பாடலான ஆகாச வீரன் என்ற பாடல் வெளியாகியுள்ளது. தற்போது இப்பாடலானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Thalaivan Thalaivii : விஜய் சேதுபதியின் ‘தலைவன் தலைவி’ –  2வது பாடல் வெளியானது!
விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 12 Jul 2025 21:38 PM

கோலிவுட் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர்தான் விஜய் சேதுபதி (Vijay Sethupathi). இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான படம் ஏஸ் (Ace). இந்த திரைப்படத்தை இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கியிருந்தார். விஜய் சேதுபதிக்கு இந்த படமானது எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இப்படத்தின் தோல்விக்குக் காரணம் சரியான ப்ரோமோஷன் இல்லாததுதான் என நடிகர் விஜய் சேதுபதியின் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இந்த படத்தை அடுத்ததாக விஜய் சேதுபதியின் நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம் தலைவன் தலைவி (Thalaivan Thalaivii). இந்த படத்தை இயக்குநர் பாண்டிராஜ் (Pandiraaj) இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலமாகத்தான் நித்யா மேனன் (Nithya Menon) , விஜய் சேதுபதியுடன் முதல் முறையாக இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் (Santhosh Narayanan) இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்தின் முதல் பாடல், பொட்டல முட்டையே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், அதைத் தொடர்ந்து இப்படத்திலிருந்து இரண்டாவது பாடலான “ஆகாச வீரன்” (Aagasa Veeran) என்ற பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை பாடகி தீ மற்றும் பாடகர் பிரதீப் குமார் இணைந்து பாடியுள்ளனர்.

தலைவன் தலைவி படக்குழு வெளியிட்ட இரண்டாவது பாடல் ரிலீஸ் பதிவு :

தலைவன் தலைவி ட்ரெய்லர் ரிலீஸ் :

விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனனின் நடிப்பில் உருவாகியிருக்கும் தலைவன் தலைவி படமானது முழுக்க, பேமிலி என்டர்டெயினர் திரைப்படமாக உருவாகியிருக்கிறது. இந்த படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில், வரும் 2025, ஜூலை 16 அல்லது 17ம் தேதியில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அறிவிப்பைப் படக்குழு விரைவில் வெளியிடும் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : டிரெண்டிங் நம்பர் 1.. கூலி பட ‘மோனிகா’ பாடல் மில்லியன் வியூஸை கடந்து சாதனை!

தலைவன் தலைவி படத்தின் கதைக்களம் :

விஜய் சேதுபதியின் இந்த படமானது காதல், நகைச்சுவை, ஹோட்டல் மற்றும் சொந்தங்கள் தொடர்பான கதைக்களத்துடன் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிகர்கள், யோகிபாபு, கண்ணம்மா புகழ் ரோஷ்ணி ஹரிப்ரியன், தீபா சங்கர், சென்ட்ராயன் மற்றும் சரவணன் எனப் பல பிரபலங்கள் இணைந்த நடித்துள்ளனர். இந்த படமானது முழுவதும் நகைச்சுவை கதைக்களத்துடன் உருவாகியிருக்கிறது.

இதையும் படிங்க : லியோவில் லோகேஷ் என்னை வீணடித்துவிட்டார்.. நடிகர் சஞ்சய் தத் குற்றச்சாட்டு!

மேலும் இப்படத்தில் அதிரடி ஆக்ஷன் கதைக்களமும் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இந்த படமானது வரும் 2025, ஜூலை 25ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீசிற்க்கு இன்னும் சில நாட்கள் மட்டும் உள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.