Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Sivakarthikeyan : சிவகார்த்திகேயனின் ‘SK24’ பட ஷூட்டிங் தாமதம்.. காரணம் என்ன தெரியுமா?

Sivakarthikeyan SK24 Movie Shooting Delay : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில், மதராஸி மற்றும் பராசக்தி போன்ற படங்கள் உருவாகிவருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து, குட் நைட் பட இயக்குநருடன் படத்தில் இணையவுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அப்படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது பற்றி விவரமாகப் பார்க்கலாம்.

Sivakarthikeyan : சிவகார்த்திகேயனின் ‘SK24’ பட ஷூட்டிங் தாமதம்.. காரணம் என்ன தெரியுமா?
விநாயக் சந்திரசேகரன் மற்றும் சிவகார்த்திகேயன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 12 Jul 2025 18:25 PM

நடிகர் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) முன்னணி நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் அமரன் (Amaran). கடந்த 2024ம் ஆண்டு வெளியான இப்படமானது பான் இந்திய அளவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் அதிகமாகினர் என்றே கூறலாம். மேலும் அவர் பிரம்மாண்ட இயக்குநர்களான ஏ.ஆர். முருகதாஸ் (A.R. Murugadoss) மற்றும் சுதா கொங்கரா (Sudha Kongara) போன்ற இயக்குநர்களில் படங்களிலும் இணைந்து நடித்து வருகிறார். மாறுபட்ட திரைக்கதைகளத்துடன் இப்படமானது தயாராகிவருகிறது. இந்நிலையில், இப்படங்களை அடுத்ததாக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் (Vinayak Chandrasekaran) இயக்கத்தில், SK24 திரைப்படத்தில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிவருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங்கும் இந்த 2025ம் ஜூலை மாதத்தில் தொடங்கவுள்ளதாக கூறப்பட்டுவந்த நிலையில், தற்போது ஷூட்டிங் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கான காரணம் என்ன தெரியுமா?. நடிகர் மோகன்லால் இப்படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், அவருக்குப் இப்படத்தின் ஷூட்டிங்கில் இணைய ஏற்ற நேரம் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போவதாகக் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

சிவகார்த்திகேயனின் SK 24 தள்ளிப்போகக் காரணம் :

சிவகார்த்திகேயனின் 24வது திரைப்படமாக உருவாக்கவுள்ள திரைப்படத்தை, இயக்குநர் விநாயக் சந்திரசேகர் இயக்கவுள்ளார். இந்த படத்தினை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன், மலையாள நடிகர் மோகன்லால் நடிக்கவுள்ளார்.

இதையும் படிங்க : ‘தளபதி விஜய்யின் ஜன நாயகன் படம் அற்புதமாக வந்திருக்கிறது’ – தயாரிப்பாளர் கொடுத்த தகவல்!

இந்த புதிய படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தை வேடத்தில் மோகன்லால் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சிவகார்த்திகேயனுடன் மோகன்லாலும் இணைந்து நடிக்கவுள்ள நிலையில், நடிகர் மோகன்லாலிற்கு சரியான  நேரம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை பிசியாக இருக்கும் நிலையில், இப்படத்திற்கான கால்ஷீட் மோகன்லால் இன்னும் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக நடிகர் சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் புதிய படத்தில் இணைய உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க : வேள்பாரி உலகம்போற்றும் படமாக உருவாகும்.. இயக்குநர் ஷங்கர் பேச்சு!

சிவகார்த்திகேயனின் மதராஸி ரிலீஸ் :

சிவகார்த்திகேயனின் முன்னணி நடிப்பில் உருவாகிவரும் படம் மதராஸி. இதை இயக்குநர் எஸ். ஆர். முருகதாஸ் இயக்கிவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பானது இறுதிக்கட்ட பணியில் இருக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படமானது அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் க்ரைம் திரில்லர் கதைக்களத்துடன் உருவாகிவருகிறது. மேலும் இப்படம் வரும் 2025, செப்டம்பர் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.