Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சினிமாவில் நடித்ததால் கிடைத்த மரியாதை.. மேடையில் ஓபனாக பேசிய சிவகார்த்திகேயன்!

Sivakarthikeyan About Cinema entry : தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நாயகனாக இருந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவர் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில், சினிமாவில் நடிக்க ஆரம்பித்ததும் கிடத்த மரியாதைகளைப் பற்றி மேடையில் ஓபனாக பேசியிருந்தார். அதை பற்ற விளக்கமாகப் பார்க்கலாம்.

சினிமாவில் நடித்ததால் கிடைத்த மரியாதை.. மேடையில் ஓபனாக பேசிய சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயன் Image Source: Social Media
barath-murugan
Barath Murugan | Published: 07 Jul 2025 09:36 AM

சின்னதிரை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan).  அதைத் தொடர்ந்து சினிமாவில் துணை நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகராக நடிக்க தொடங்கினார். தற்போது அனைவரும் திரும்பிப்பார்க்கும் விதத்தில், முன்னணி கதாநாயகனாகப் படங்களில் நடித்து வருகிறார். இவர் சினிமாவில் ஆரம்பத்தில் மெரினா (Marina) என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். இந்த படமானது கடந்த 2012ம் ஆண்டு இயக்குநர் பாண்டிராஜ் (Pandiuraj) இயக்கத்தில் வெளியானது. இந்த படமானது இவருக்கு அந்த அளவிற்கு வரவேற்புகளைக் கொடுக்கவில்லை. இத தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், 2012ம் ஆண்டுகள் வெளியான 3 படத்தில், தனுஷின் (Dhanush)  நண்பனாக நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் பிரபலமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார்.

நகைச்சுவை மற்றும் டைமிங் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தது சிவகார்த்திகேயன் சினிமாவில் நடிகராக நுழைந்தார். அதை தொடர்ந்து மனம் கொத்தி பறவை, கோடி பில்லா கில்லாடி ரங்கா என அடுத்தடுத்த படங்ககளில் நடித்து வந்தார். இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலத்தைக் கொடுத்த படமாக மைந்தது வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

இப்படத்தின் பிரபலத்திற்கு அடுத்ததாக இவருக்குப் படங்கள் குவியத்தொடங்கியது. மேலும் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகி வெற்றிபெற்ற படம் அமரன் (Amaran) . இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் உண்மை சம்பவத்தை அடிப்படியாகக் கொண்டு இப்படம் வெளியாகியிருந்தது. இப்படத்தை அடுத்ததாகப் பராசக்தி மற்றும் மதராஸி போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிவகார்த்திகேயன், சின்னதிரையில் இருந்து, சினிமாவில் நுழைந்த பிறகு கிடைத்த மரியாதையைப் பற்றி பேசியுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் சொன்ன விஷயம் :

முன்னதாக பேசிய நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் நகைச்சுவையாகப் பேசத் தொடங்கினார். அவர் அந்த நிகழ்ச்சியில், “தொகுப்பாளர் கோபிநாத்திடம், “உண்மையில் நான் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தபின் எனக்கு எவ்வளவு சந்தோசம் கிடைத்தது என்று நானா புரிந்துகொண்டேன். ஆரம்பத்தில் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றும்போது, தாகத்திற்குத் தண்ணீர் கேட்டாலும் கொடுக்கமாட்டார்கள். ஆனால் தற்போது நானா நடிகராக ஆனபிறகு, நான் அமர்ந்திருக்கும் இருக்கை பக்கத்தில் வந்து சார் ஜூஸ் வேண்டுமா? , சார் கேக் வேண்டுமா ?என்று கேட்கிறார்கள்.

அதை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் நான் அமர்ந்திருக்கும் இருக்கைகள் பக்கத்தில் பார்த்தால், ஒரு புறம் தமன்னா மற்றொருபுறம் சமந்தா எனப் பலருடன் அமர்ந்திருக்கிறேன் என நகைச்சுவையாக சிவகார்த்திகேயன் பேசியிருந்தார். அந்த நிகழ்ச்சியில் நடிகர் தனுஷும் அவருடன் இணைந்து கலந்துகொண்ட நிலையில், சிவகார்த்திகேயன் சொன்ன விஷயத்திற்கு தனுஷ் விழுந்து விழுந்து சிரித்திருந்தார். இந்த நிகழ்ச்சி குறித்த வீடியோ தற்போதுவரையிலும் இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.