Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Coolie : டிரெண்டிங் நம்பர் 1.. கூலி பட ‘மோனிகா’ பாடல் மில்லியன் வியூஸை கடந்து சாதனை!

Pooja Hegdes Monica Song Crosses 5 Million Views : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம் கூலி . இப்படத்தின் இரண்டாவது பாடலான மோனிகா பாடல், பூஜா ஹெக்டேவின் நடனத்தில், 2025, ஜூலை 11ம் தேதியில் வெளியானது. இப்பாடலானது வெளியாகி 24 மணி நேரத்தில் சுமார் 5 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

Coolie : டிரெண்டிங் நம்பர் 1.. கூலி பட ‘மோனிகா’ பாடல் மில்லியன் வியூஸை கடந்து சாதனை!
மோனிகா பாடல் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 12 Jul 2025 19:37 PM

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் (Super Star Rajinikanth) முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் கூலி (Coolie). இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் தமிழில் இறுதியாகத் தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) லியோ (Leo) திரைப்படம் வெளியாகியிருந்தது. அந்த படத்தைத் தொட்ந்து ரஜினிகாந்த்துடன் இந்த கூலி படத்தில் இணைந்தார். இந்த படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் (Sun Pictures) நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander), இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவரின் இசையில் இதுவரை இப்படத்திலிருந்து இரு பாடல்கள் வெளியாகியிருக்கின்றன. முதலில் வெளியான சிக்கிட்டு வைப் பாடலை அடுத்தாக, கடந்த 2025, ஜூலை 11 ஆம் தேதி  இரண்டாவது பாடலான மோனிகா (Monica) என்ற பாடலையும் படக்குழு வெளியிட்டிருந்தது.

லிரிக்கல் வீடியோவாக வெளியான இதில், நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hgede) சிறப்பு நடனமாடியிருந்தார். மேலும் அவருடன் மலையாள நடிகை சௌபின் ஷாஹிரும் நடனமாடியிருந்தார். இந்நிலையில்,  இந்தப் பாடல் மக்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் வெளியான இப்பாடல் , தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் நம்பர் 1ல் இருக்கிறது. மேலும் இப்பாடலானது தமிழில் மட்டும் சுமார் 5 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை பிடித்துள்ளது.

இதையும் படிங்க :  சிவகார்த்திகேயனின் ‘SK24’ பட ஷூட்டிங் தாமதம்.. காரணம் என்ன தெரியுமா?

கூலி படக்குழு வெளியிட்ட மோனிகா பாடல் வீடியோ பதிவு :

ரஜினிகாந்த்தின் கூலி :

நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது திரைப்படமாக இந்த கூலி உருவாகியுள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த்துடன் நடிகர்கள் சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், நாகார்ஜுனா, உபேந்திர ராவ் மற்றும் பாலிவுட் பிரபலம் அமீர்கானை எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இயக்குநர் லோகேஷ் கனகராஜின் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படமானது பான் இந்திய மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இப்படத்தில் கதைக்களமானது கடல் சார்ந்த கொள்ளை சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க :  அட்லி படத்தில் 4 வேடங்களில் நடிக்கும் அல்லு அர்ஜுன்? வெளியான தகவல்

இதில் ரஜினிகாந்த் அதிரடி ஆக்ஷ்ன் சந்தைகளிலும் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. அந்த இந்தியப் பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது. மேலும் இப்படத்திலிருந்து மற்றப் படங்களைப் போல டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகாது என்று கூறப்படுகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் டீசர் வெளியாவதற்கு வாய்ப்புகள் குறைவு என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. இதைப் பற்றிப் படக்குழு அறிவிப்புகளை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.