Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அனுபவசாலிகள் இல்லையென்றால் எந்த கட்சியும் தேறாது… ரஜினிகாந்த் அதிரடி !

Velpari Event Highlights : எழுத்தாளரும் மதுரை எம்பியுமான சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி வெற்றி விழாவில் நடிகர் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், அனுபவ சாலி இல்லை என்று சொன்னால் எந்த இயக்கமும் கட்சியும் தேறாது என்று பேசினார். அவர் பேசியது குறித்து முழுமையாக பார்க்கலாம்.

அனுபவசாலிகள் இல்லையென்றால் எந்த கட்சியும் தேறாது… ரஜினிகாந்த் அதிரடி !
ரஜினிகாந்த்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 11 Jul 2025 23:24 PM

நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அவருடன் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். மேலும் ஆமிர் கான் இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் எழுத்தாளரும், மதுரை எம்பியுமான சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி (Velpari) வெற்றி விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசினார். அப்போது தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது குறித்து பேசியது அரங்கில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியிருந்தது.

வேள்பாரி வெற்றிவிழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த்

விழாவில் பேசிய ரஜினிகாந்த், ஷங்கர் வேள்பாரியை வைத்து படம் எடுக்கவிருக்கிறார். அதனால் அவர் வந்திருக்கிறார். கோபிநாத் நன்றாக பேசுவார் அவர் வந்திருப்பதில் நியாயம் இருக்கிறது. உங்களுக்கு ஒரு ஹீரோ வேண்டும் என்றால் சிவகுமார் இருக்கிறார். ராமாயணம் உள்ளிட்டவை பற்றி சிறந்த அறிவு அவருக்கு இருக்கிறது. இல்லையென்றால் கமல்ஹாசனை கூப்பிட்டிருக்கலாம். அவர் எவ்வளவு அறிவாளி, எவ்வளவு படித்திருக்கிறார். அவர்களை விட்டுவிட்டு, 75 வயதிலேயும் கூலிங் கிளாஸ் போட்டுட்டு ஸ்லோமோஷனில் நடந்து வரும் இந்த ஆளை கூப்பிட்டிருக்காங்கனு யாராச்சும் நினைப்பாங்கனு சொன்னேன், என்று ரஜினிகாந்த் பேசியதும் சிரிப்பொலியால் அரங்கம் அதிர்ந்தது.

இதையும் படிக்க: ரஜினிகாந்த் சார் கூலி பட ஷூட்டிங்கில் ரொம்ப கூல்.. நடிகை ஸ்ருதி ஹாசன் பேச்சு!

வைரலாகும் ரஜினிகாந்த் பேசிய வீடியோ

இதையும் படிக்க : படையப்பா படத்தில் அந்த காட்சியில் ரஜினி நடிக்க ஒத்துக்கல.. கே.எஸ். ரவிக்குமார் உடைத்த உண்மை!

மேலும் பேசிய அவர், பல மாதங்களுக்கு முன்பு கலைவாணர் அரங்கில் எ.வ.வேலுவின் கலைஞர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டேன். அப்போது நான் ‘பழைய ஸ்டூடண்டை சமாளிப்பது கடினம். அவர்கள் வகுப்பறையைவிட்டு செல்லமாட்டார்கள்’ என்று கூறியிருந்தேன். அதே சமயம், ‘அப்படியிருந்தாலும் பழைய ஸ்டூடண்டுக்கு தான் தூண்கள். அவர்கள் தான் பவுண்டேஷன். அனுபவம் அதிகம் கொண்டவர்கள்.

அனுபவசாலிகள் இல்லை என்று சொன்னால் எந்த இயக்கமும், எந்த கட்சியும் தேறாது. அவர்கள் தூண்கள் மட்டுமல்ல. சிகரங்கள் கூட’ என்றும் சொல்லலாம் என இருந்தேன். ஆனால் அதை மறந்துவிட்டேன். அதனால் இந்த முறை வரும்போது கவனமாக இருக்க வேண்டும் என நினைத்தேன். சரியாக பேச வேண்டும் என நினைத்தேன் என்று தெரிவித்தார்.