Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Cinema Rewind : படையப்பா படத்தில் அந்த காட்சியில் ரஜினி நடிக்க ஒத்துக்கல.. கே.எஸ். ரவிக்குமார் உடைத்த உண்மை!

KS Ravikumars Untold Story of Padayappa : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் கே எஸ், ரவிக்குமார். இவரின் இயக்கத்தில் வெளியாகி ஹிட்டான படங்களில் ஒன்றுதான் படையப்பா. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க மறுத்த காட்சி பற்றி இயக்குநர்க் கே.எஸ் ரவிக்குமார் பேசியது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.

Cinema Rewind : படையப்பா படத்தில் அந்த காட்சியில் ரஜினி நடிக்க ஒத்துக்கல.. கே.எஸ். ரவிக்குமார் உடைத்த உண்மை!
ரஜினிகாந்த் மற்றும் கே.எஸ். ரவிக்குமார்Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 11 Jul 2025 09:50 AM

இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் (KS. Ravikumar) தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் எனக் கூறலாம். இவர் தமிழில் நடிகர்கள் கமல்ஹாசன் முதல் ரஜினிகாந்த் வரை பல பிரபலங்களை வைத்துப் பல படங்களை இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார். சினிமாவில் ஆரம்பத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி பின் இயக்குநராக அறிமுகமானார். இவை இயக்கத்தில் முதலில் வெளியான திரைப்படம் “புரியாத புதிர்” (Puriyaadha Pudhir). கடந்த 1990ம் ஆண்டு வெளியான இப்படத்தில், நடிகர்கள் ரகுவரன், ரஹ்மான், சரத்குமார் என பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தின் வரவேற்பை அடுத்ததாக இயக்குநர் ரவிக்குமார் அடுத்தடுத்த படங்களை இயக்க தொடங்கினார். சூரியன் சந்திரன், பேண்ட் மாஸ்டர், சக்திவேல், நாட்டாமை, பெரிய குடும்பம், முத்து, பரம்பரை என பல படங்களை இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார். இந்த வகையில் இவரின் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம்தான் படையப்பா (Padaiyappa).

கடந்த 1999ம் ஆண்டு வெளியான இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Super Star Rajinikanth)  கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் அவருக்கு எதிர் கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் (Ramya Krishnan) நடித்திருந்தார். முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட் படமாக அமை ந்திருந்தது. இந்த படமானது அப்போதே திரையரங்குகளில் சுமார் 100 நாட்களுக்கும் மேலாக ஓடியதாகவும் கூறப்படுகிறது.

இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் மற்றும் ரஜினிகாந்தின் கூட்டணியில் வெளியான இப்படம் தற்போது வரையிலும் ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இப்படம் குறித்து முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய கே.எஸ். ரவிக்குமார், “ரஜினிகாந்த் படையப்பா படத்தில் தனது தங்கையுடன் அழுது நடிக்கும் காட்சியில் நடிக்கமாட்டேன் என கூறியது பற்றிப் பேசியிருக்கிறார்.

படையப்பாவில் ரஜினிகாந்த் நடிக்க மறுத்த காட்சி குறித்து கே.எஸ். ரவிக்குமார் பேச்சு :

முன்னதாக பேசிய நேர்காணல் இயக்குநர்க் கே.எஸ். ரவிக்குமார், “படையப்பா படத்தில் நடிகர் ரஜினிகாந்த், வீட்டை இழந்து தங்கச்சி கல்யாணம் நின்ற பிறகு ஒரு காட்சி இருக்கும். அந்த காட்சியில் அவரின் தங்கைக்குச் சோறு ஊட்டும் விதத்தில், அழுதுகொண்டே அவர் நடித்திருந்தார். அப்போது நானா இந்த காட்சி குறித்து, ரஜினிகாந்த் சாரிடம் சொல்லும்போது அவர், “ஐயோ நான் இந்த காட்சியில் நடித்தால் நன்றாக இருக்காது, அதுவும் சோறு ஊட்டிவிட்டு அழுதாள் நன்றாக இருக்காது” எனக் கூறினார்.

பின் ஒத்துக்கொண்டார் ரஜினிகாந்த், அந்த காட்சியும் ஒரே சிங்கி ஷாட்தான். கேமராவை ட்ராளியுடன் பொருத்தி விட்டு, ரஜினி, தங்கைக்குச் சோறு ஊட்டுவாரு, ஊட்டிவிட்டுட்டே பேசிக்கொண்டே அழுவார். அதை தொடர்ந்து நடிகை லட்சுமி அவரை பின்னனால் இருந்து அணைப்பார்கள் என அந்த காட்சியை சிங்கிள் ஷாட்டில் எடுத்தோம். ஐந்தில் நடிக்கும்போது ரஜினி ஆரம்பத்தில் வேண்டாம் என கூறினார். நான்தான் அவரிடம் கெஞ்சிக் கூத்தாடி நடிக்கவைத்தேன்” என இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் ஓபனாக பேசியிருந்தார்.