Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Shruti Haasan : ரஜினிகாந்த் சார் கூலி பட ஷூட்டிங்கில் ரொம்ப கூல்.. நடிகை ஸ்ருதி ஹாசன் பேச்சு!

Shruti Haasan About Rajinikanth Positive Energy In Coolie Shooting : நடிகை ஸ்ருதி ஹாசன் நடிப்பில் தமிழில் உருவாகியிருக்கும் திரைப்படம் கூலி. இடத்தில் இவர் ரஜினிகாந்த்தின் மகள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தில் ரஜினிகாந்த்துடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் கிடைத்த அனுபவம் பற்றி ஸ்ருதி ஹாசன் பகிர்ந்துள்ளார்.

Shruti Haasan : ரஜினிகாந்த் சார் கூலி பட ஷூட்டிங்கில் ரொம்ப கூல்.. நடிகை ஸ்ருதி ஹாசன் பேச்சு!
ஸ்ருதி ஹாசன் மற்றும் ரஜினிகாந்த்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 11 Jul 2025 16:28 PM

கோலிவுட் சினிமாவையும் கடந்து, தென்னிந்திய முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன் (Shruti Haasan). இவர் நடிகர் கமல்ஹாசனின் (Kamal Haasan) மூத்த மகள் ஆவார். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக வெளியான திரைப்படம் லாபம் (Labham). கடந்த 2021ம் ஆண்டு இப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தை அடுத்து தெலுங்கில் பிரபாஸுடன் இணைந்து சலார் படத்தில் நடித்திருந்தார்.  இந்நிலையில், 3 ஆண்டுகளுக்கு பின் இவர் நடிப்பில் தமிழில் வெளியாகவுள்ள திரைப்படம்தான் கூலி (Coolie). இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh kanagaraj) இயக்கத்தில், ரஜினிகாந்த் (Rajinikanth ) இப்படத்தில் முன்னணி நாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் முக்கிய வேடத்தில் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினியின் மகள் வேடத்தில் ஸ்ருதி ஹாசன் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த கூலி படமானது மிகவும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் நிலையில், வரும் 2025 ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில், சமீபத்தில் நேர்காணலை ஒன்றில் பேசிய ஸ்ருதி ஹாசன், ரஜினியுடன் கூலி படத்தில் நடித்த அனுபவம் பற்றிப் பகிர்ந்துள்ளார். அதில் ரஜினிகாந்த் சார் கூலி படப்பிடிப்பில் மிகவும் கூலாக இருப்பார் எனக் கூறியிருக்கிறார். மேலும் அவர் பேசியதை பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

ரஜினிகாந்த் பற்றி பேசிய நடிகை ஸ்ருதி ஹாசன் :

நடிகை ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அந்த நேர்காணலில் அவரிடம், பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து ரஜினியுடன் கூலி படத்தில் நடித்தது பற்றியும் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த நடிகை ஸ்ருதி ஹாசன், அவர் மிகவும் அன்பானவர் உண்மையிலே அனைவரிடமும் மிகவும் அன்பாக இருப்பார் என்றார்.

இதையும் படிங்க : கார்த்தி-கல்யாணி பிரியதர்ஷன் காம்போ.. மார்ஷல் பட அப்டேட் இதோ!

நான் அவரிடம், “சார் நீங்கள் மிகவும் கூலானவர். உங்களிடம் பேசுவதற்கு மிகவும் எளிதாக இருக்கிறது” என்று கூறினேன். மேலும் அவர் கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்தாலே பாசிட்டிவ் எனர்ஜி இருக்கும், அந்த எனர்ஜி அவரை சுற்றியிருக்கும் அனைவரும் உணர்வார்கள் என அவர் அதில் பேசியிருந்தார்.

இதையும் படிங்க : சிவகார்த்திகேயன் படத்துடன் நேரடி மோதல் – விஜய் ஆண்டனி சம்பவம்!

கூலி திரைப்பட பாடல் அறிவிப்பு :

கூலி பட பட்ஜெட் :

நடிகர் ரஜினிகாந்த்தின் இந்த கூலி படமானது மிகவும் பிரமாண்ட கதைக்களத்துடன் உருவாகியிருக்கிறது. இந்த படத்தில் பான் இந்திய மொழி நடிகர்கள் பலவும் இணைந்து நடித்துள்ளனர். சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்திருந்து அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி வருகிறது. இந்த கூலி படமானது சுமார் ரூ. 350 கோடிகளுக்கு மேல் தயாராகியுள்ளதாகக் கூறப்படுகிறது.